Sunday, 31 March 2013

புது முயற்சி!

ஓ...
உன் கரிய விழியில்
காதல் பார்வையா?
இருபதாம்
நூற்றாண்டிலும்,
இனிய பார்வையா?

முடியாது போ!
நான்...
ஒரு பட்ட மரம்
இனியும் என்னை
ஏமாற்ற முடியாது!

உடனே செல்!
ஒரு புது மனிதனை,
நல்லவனை
ஏமாற்று!

மீண்டும் காதலின்
அத்தியாயங்கள்
உரு பெறட்டும்!

தோல்வியில்
துவண்ட நான்
என்றென்றும்
வாழ்த்துகிறேன்!

No comments:

Post a Comment