கனமழை
பெய்துவிட்டால்,
கார்முகில்
கரைந்துவிடும்!
கதிர்வீசி கதிரவன்
முத்தமிட்டால்,
நீர் நிலைகள்
வறண்டுவிடும்!
முழு நிலவு
பளிச்சிட்டால்,
பின்னர் சந்திரனும்
தேயத்துவங்கும்!
உயிர் பெற்றால்
சாவு உண்டு!
அள்ள அள்ள
அனைத்தும்
குறையும்!
எறும்பூற...
கல்லும் தேயும்!
ஆனால் அன்பு...
அன்பு கொண்டோர்
அனைவருக்கும்
அள்ளி அள்ளி
வழங்கினாலும்,
துளி கூட
குறையாது!
பெய்துவிட்டால்,
கார்முகில்
கரைந்துவிடும்!
கதிர்வீசி கதிரவன்
முத்தமிட்டால்,
நீர் நிலைகள்
வறண்டுவிடும்!
முழு நிலவு
பளிச்சிட்டால்,
பின்னர் சந்திரனும்
தேயத்துவங்கும்!
உயிர் பெற்றால்
சாவு உண்டு!
அள்ள அள்ள
அனைத்தும்
குறையும்!
எறும்பூற...
கல்லும் தேயும்!
ஆனால் அன்பு...
அன்பு கொண்டோர்
அனைவருக்கும்
அள்ளி அள்ளி
வழங்கினாலும்,
துளி கூட
குறையாது!

No comments:
Post a Comment