Monday, 25 March 2013

பரிதவிப்புகள்!

அடியே!
உன் சிரிப்பில்
பயம் தெரிந்தது,
பாவப்பட்டேன்!

ஏளனம்
தெரிந்தது,
கோபப்பட்டேன்!

ஏக்கம்
தெரிந்தது,
பரிதவித்தேன்!

பற்றுதல்
தெரிந்தது
நேசித்தேன்!

சலனம்
தெரிந்தது,
அனைத்து
கொண்டேன்!

இதோ...
உன் சிரிப்பில்
செருக்கு
தெரிகிறது,
விலகுகிறேன்!

நாளை
உன் சிரிப்பில்
ஏமாற்றம்
தெரியும்!

No comments:

Post a Comment