Friday, 1 March 2013

வெட்கம்!

இன்னமும்
தூங்கியபடியிருக்கும்
என்னை எழுப்பிவிட
வந்துவிட்டாயா?
நன்றி! நன்றி!

நடைபிணமாய்
மாறிவிட்ட என்னை,
நல்ல மனிதனாய்
பறைசாற்ற
துணிந்துவிட்டாயா?
மிக்க மகிழ்ச்சி!

சிக்கிவிட்ட
என் வாழ்வை,
நேர் பாதையில்
செப்பனிட
முடிவு செய்தாயா?
எனக்குள் உவகை!

சீ! போ...
எதிர்காலமே!
உன்னை இன்னமும்
கனவில்தான்
சந்திக்கிறேனா?
மிகவும் வெட்கம்!

No comments:

Post a Comment