பெற்றோர்கள்
உன்னை
பேணி வளர்ப்பது,
உனது பிறப்பை
நீ அறியும் வரைதான்!
சகோதரிகள் உன்னை
பேணீ காப்பது,
உன்னிடம் சீர்பெற்று
செல்லும் வரைதான்!
அண்ணன் தம்பி
அரவணைப்பு,
நீ அவர்களுக்கு
உதவும் வரைதான்!
உறவினர்களின்
உறுதுணைகள்,
வெறும்
உதட்டளவில்தான்!
நண்பர்கள்
நட்பு கொள்வது,
உன் உயிர்விடும்
நட்பின் உரசலில்
இறுதி நாள்வரைதான்!
மனிதா...
இறுதிவரை
துணை வராத சொந்தம்,
உன்னிடம் ஒருபோதும்
நிலைப்பதில்லை!
உனக்கு துணை நீதான்
நினைவில் கொள்!
உன்னை
பேணி வளர்ப்பது,
உனது பிறப்பை
நீ அறியும் வரைதான்!
சகோதரிகள் உன்னை
பேணீ காப்பது,
உன்னிடம் சீர்பெற்று
செல்லும் வரைதான்!
அண்ணன் தம்பி
அரவணைப்பு,
நீ அவர்களுக்கு
உதவும் வரைதான்!
உறவினர்களின்
உறுதுணைகள்,
வெறும்
உதட்டளவில்தான்!
நண்பர்கள்
நட்பு கொள்வது,
உன் உயிர்விடும்
நட்பின் உரசலில்
இறுதி நாள்வரைதான்!
மனிதா...
இறுதிவரை
துணை வராத சொந்தம்,
உன்னிடம் ஒருபோதும்
நிலைப்பதில்லை!
உனக்கு துணை நீதான்
நினைவில் கொள்!

No comments:
Post a Comment