Thursday, 31 October 2013

புதுவரவு!

குப்பை
மேட்டுக்குள்
குறி தவறிய
குண்டுமணி!

சிந்தனை
கோபுரத்தின்
வழிதவறிய
கலசம்!

மெருகு
சேர்த்த
பின்னும்
கசங்கிய
கருக்கள்!

அழுகிய
பின்னும்
அழகு தரும்
அவசரப் பூக்கள்!










சோகத்திலும்
செவிக்கு கிடைத்த
இனிய பாட்டு!

நாகரிகம்
வளர்ந்த
பின்னும்
அழியாத
மண் வாசனை!

எண்ணற்ற
சறுக்கல்களில்
உயர்ந்த வாழ்வு!

வாழ்க்கை
என்னும்
புத்தகத்தில்
இடம் பெறாத
அவளின்
புது வரவு!

Tuesday, 29 October 2013

தீண்டல்கள்...

சுகம் கண்ட
பேச்சில்
காதல் பூக்கள்!

முகம் கண்ட
அழகு
தூவானம்!

அகம் கண்ட
நெஞ்சத்தில்
அடிச்சுவடு!

யோகம் கண்ட
காலத்தின்
பரிசுகள்!


போகம் கண்ட
மனதுக்குள்
தேன் கூடு!

சோகம் கண்ட
வாழ்க்கையில்
சிலிர்ப்பு!

வேகம் கண்ட
மோகத்தில்
தவிப்பு!

மோகம் கண்ட
முழுமூச்சில்
சிறிய தடை!

தாகம் கண்ட
பின்னும்
தனிவழி!

இராகம் கண்ட
பின்னே
புதுப்பாட்டு!

அவளின்
சின்ன சின்ன
தீண்டைகள்!

Monday, 28 October 2013

தடுமாற்றம்...

மனக் கணக்கு
மாறும்போது,
மனிதக் கணக்கும்
மாறுகிறது!

உயர்வுகள்
மேலோங்கும்
போது...
தாழ்வுகள் கூட
சிறப்பாய் மாறும்!


சாக்கடை
நீராவியாக
சென்றாலும்,
தூய்மையான
மழையாய் தானே
பொழிகிறது!
சில நேரங்களில்...
சில தடுமாற்றம்!

Saturday, 26 October 2013

அழுத்தமாய்...

அவளின்
பாதச் சுவடுகளைகூட
காத்திருந்து காவல்
செய்த காலம்!

மழையில்
கரைந்திடுமோ...
என்ற அச்சத்தால்
பரிதவித்தேன்!


அவள்
என் மேல்
கோபம் கொண்டு,
அழுத்தமாய்...
பதித்த காதலின்
கால்சுவடுகள்!
கடைசிவரை
அழியாது!

Friday, 25 October 2013

பாவம்...

அவள்...
களிநடம் புரிய
நெஞ்சத்தில்
மஞ்சம்
அமைத்து,
மலர் தூவி
காத்திருந்தேன்!


அவளின்
பிஞ்சுக் கால்கள்
வலிக்கிறதென்றாள்!
ஆம்... நான்
அவசரமாய் தூவிய
ரோசா மலர்கள்
முற்றிலும்
பாவம்!

விலகுவேன்!

காதலில்
இளஞ்சூடு
இனிமை தந்தது,
இப்போது...
அனலாய்
கொதிக்கிறது!
விலகத் துடிக்கிறேன்
முடியவில்லை!


நிச்சயமாய்
விலகுவேன்,
உயிராய் அல்ல
சாம்பலாய்!

Thursday, 24 October 2013

சீற்றம்...

செந்தூரப்பூவின்
தெவிட்டாத வாசம்!
இனமறியா வேதனை
என்றென்றும் வீசும்!

தனித்த... அவளின்
மூச்சுக்காற்றில்
வெப்பமறியா
தவிப்பிலும்...


உடல் இச்சையின்
இன்பமறியா
துடிப்பிலும்...

அவளின்...
நிழலை,
உயிராய் நினைத்து,
என் அன்பு முத்தம்!

ஆனால்...
அவளின் பிரிவு,
வாட்டும் தனிமை,
முடங்கிய காதல்
மோகமெல்லாம்,
இயற்கையின்
சீற்றம்!

Wednesday, 23 October 2013

அவள்...

அவளை
முகிலாய்
ரசித்தேன்,
மழையாய்
என்னிடம்
வந்தாள்!


அவளை
மயிலாய்
ரசித்தேன்,
தோகை
விரித்து ஆடி
மயக்கினாள்!

அவளை
உயிராய்
நினைத்து
உறங்கினேன்,
கனவில் ஒட்டி
உறவாடி,
உல்லாசம்
தந்தாள்!

Sunday, 20 October 2013

ரசனை...

உன்னை ரசித்த
கண்களால்
என்னையும்
ரசித்தேன்,
நான் நன்றாய்
இல்லை!


ஆனால் நீ...
என்னை ரசித்த
உன் கண்காளால்,
அடுத்தவனை
ரசித்தாயே?
அதுவும்...
நன்றாய் இல்லை!

Thursday, 17 October 2013

நீராய்...

அருவி நீராய்
அவள்...
நான் குளிர்ச்சியாய்
குளித்து முடித்தேன்!

ஆற்று நீராய்
அவள்...
நான் மகிழ்ச்சியாய்
நீந்தி களித்தேன்!


குளத்து நீராய்
அவள்...
நான் முதிர்ச்சியாய்
மூழ்கி திளைத்தேன்!

ஆனால்!
கடல் நீராய்
அவள்...
சற்று நிதானித்து
உப்பின் சுவையை
இனிமையாக்கி
கொண்டேன்!

இப்போது
நான்...
அவளுடன்
இனிமையாய்!

Wednesday, 16 October 2013

ஏளனமாய்...

சுவடுகள்
இல்லாத
வழித்தடங்கள்!

வானில்
தடம் பதிக்க
நான் செய்த
முயற்சி...
வீணில்
கை நழுவிய
நிகழ்ச்சி!


சொல்லிய
சொல்லுக்கு கூட
எட்டாத செவிகள்!
எண்ணங்கள்
மட்டும்...
என்னை பார்த்து
ஏளனமாய்!

Tuesday, 15 October 2013

கதறல்!

குழந்தையின்
கதறல்...
தாயுள்ளத்தின்
சிறு தவிப்பு!

காலத்தின்
உதறல்...
கருமையின்
பரிதவிப்பு!

மோகத்தின்
சிதறல்...
சீற்றத்தின்
சிறு குறும்பு!


சோகத்தின்
கதறல்...
சொந்தத்தின்
முனுமுனுப்பு!

காதலின்
குமுறல்...
சாவின்
அரவனைப்பு!

உனது
பதறல்...
ஆழத்தின்
முத்தாய்ப்பு!

Monday, 14 October 2013

கேட்க கிடைக்காத...

நான் இல்லாதபோது
இன்பம் என்றால்...
நான் இல்லாமலேயே
போய்விடுவேன்!


இன்னமும்
எனது இன்பத்தைவிட
என்னையே...
பாரமாய் சுமக்கும்
உன் சோகம்!

இடர்பட்ட பின்னே
இனிமை தர
நான்...
இல்லாமலேயே
உன் சிரிப்பொலியை
கேட்பேனா?

Sunday, 13 October 2013

தழுவல்...

நீ துள்ளிய
துள்ளலில்
துவண்ட...
என் இதயம்,
என் இச்சையின்
உயிர்மூச்சில்,
உரமற்ற செயலாய்,
மூன்றாம் பிறையாய்
தோன்றி மறைந்தது!


உன்னை...
காற்றாய் தழுவி
இனிமை கண்டேன்
கனவில்!
உணர்வில் நாம்
ஒன்று சேரும்
நாள் எப்போது?

Saturday, 12 October 2013

உயிருடன்...

நீ உறங்கிய
காலம் முடிந்து,
இன்னலின் வேகம்
குறைந்து,
இனிமை பல
எனக்கு தந்து,
என் சோக
முகத்துக்கு
சுகம் தந்த போது...


நீ கொண்டு வந்த
பனிக் குடங்களின்
ஈர சிலிர்ப்பை,
காதலின்
பரிதவிப்பை,
உணர்ச்சித் தீயை,
அனுபவித்த நான்!
இறந்த பின்னும்
உயிருடன் வாழும்
காதலனாய்...
மயங்கினேன்!

Friday, 11 October 2013

அற்பவாழ்வு!

அலங்கரிக்கப்பட்ட
தேர் பவணி,
அச்சாணி
இல்லாமல்!

இசை தரும்
புல்லாங்குழல்
அடுப்படியில்
ஊதுகோலாய்!


கூடு கட்டி
உயர்வாய்
வாழ்ந்த தேனி,
வாடகைக்கு
குப்பை மேட்டில்!

பெரும் பசிக்கு
திடிரென கிடைத்த
சோளப் பொரி!

மனிதனின்
நிதானமில்லா
வாழ்வில்
நிலை கெட்ட
சிரிப்புகள்!
அவசரமாய்
கிடைத்த
அற்பவாழ்வு!

Thursday, 10 October 2013

இனிக்காது!

அழகு நடை
பயிலும் அன்னமே!
உனக்கு இனி குரலும்
இருந்துவிட்டால்?










கம்பீர காட்சி தரும்
அல்லி மலரே!
உன்னை பெண்கள்
கூந்தலில்
சூடிக்கொண்டால்?










மென்மையில்
மேன்மை கொண்ட
வெண் புறாவே!
உனக்கு மயில் போன்று
தோகை இருந்துவிட்டால்?


காட்டுக்கு அரசனாய்
பயம் காட்டும் சிங்கமே!
நீ என்றாவது
ஆடல் நிகழ்த்தினால்?


எட்டாத தொலைவில்
விண்ணில் உலா வரும்
வெண்ணிலவே!
நீ என்றாவது காதலர்
கைகளில் கன நேரம்
கிடைத்துவிட்டால்?


கேள்விகளின்
விடைகள் என்றென்றும்
இனிக்காது!
இயற்கை மாற்றம்
அழகு பெறாது!

Wednesday, 9 October 2013

தீயாய்...

ஒளி தரும்
தீஞ்சுடரென்று
ஓடிச் சென்று
நோக்கினேன்!
அழகை கண்டு
அருகிலும் சென்றேன்!


ஒளி தந்தாலும்
இயற்கை தந்த
தீயின் கொடுமை
மாறவில்லை!
மீண்டும் ...
சுட்டுக்கொண்டேன்!
எதிர்பார்ப்புகள்
ஏமாற்றம்!

Tuesday, 8 October 2013

உலகுக்கு தேவையில்லை!

என் கவிதை
வரிகளின்
கற்பனையை,
என் நெஞ்சத்தில்
வடித்தெடுத்த
ஓலங்களை,
என்னுள்
உரசி இரசித்த
உயிர்மூச்சை,
உருவமில்லா
இனிமையை,
அவளின்...
உள்ளம் தீண்டவா
இழக்க வேண்டும்!


கற்பனைகள்...
வெளியுலகின்
நிழல்கள்!
அதனை
எனக்கு மட்டும்
சொந்தமாக்கியது
சுயநலம்!
அனைவரும்
ருசிக்கும்
கற்பனையை
மூடி மறைப்பது
எங்ஙனம்
நியாயம்!











எனது
கவிதைகளையும்
என்னையும்,
இயற்கையே!
உனக்கு
படைக்கிறேன்!
உனதாக்கிக்கொள்!
இல்லையேல்...
என்னைக் கொல்
நான் தேவையில்லை
இவ்வுலகிற்கு!

Sunday, 6 October 2013

அமைதி!

நேற்றுஅவளிடம்
கிடைக்கவில்லை!
இன்று இவளிடமும்
கிடைக்காது!
நாளை எவளிடமாவது
கிடைக்குமா?
இந்த ஆர்ப்பரிக்கும்
இதயத்திற்கு அமைதி!


பெண் பித்தன்
நான் இல்லை!
ஆயினும்...
எந்த பெண்ணும்
என்னை விடவில்லை!
கன்னியரின்
காதல் விளையாட்டில்
நான்...
அடித்து உருட்டும்
பந்து!

உண்மைக்காதலுக்கு
ஏங்கும்...
அமைதியில்லா
இதயம்!
அன்பின் அமைதியில்
நான் மகிழும் நாள்
எப்போது?

Saturday, 5 October 2013

தெரு விளக்கு!

எனக்குள்
உயிராய்,
குருதியாய்
கலந்தபின்...
எனக்கு கிடைத்த
புத்தொளி என்று
பெருமிதம்
கொண்டேன்!


அந்த ஒளி
வெள்ளத்தில்,
எல்லையில்லா
மகிழ்ச்சி
கண்டேன்!

அவளோ...
நான் உனக்கு மட்டும்
விளக்கல்ல...
தெரு விளக்கு
என்றாள்?

Friday, 4 October 2013

அவளின் தாகம்!

அவளின்
கருமைமிகு
மேகக் கூட்டத்தில்
என்னை
நுழைத்துக் கொண்டேன்!
எனக்கு மூச்சுத் திணறலா?
இல்லை...
குளிர்ச்சியின் இனிமை!


அவளின் கல் மனதில்
உளி கொண்டு
சிற்பம் வடித்தேன்!
தேய்ந்தது உளியா?
இல்லை...
மலர்ந்தது காதல்
என்னும் உயிரோவியம்!


அவளின் செந்தாமரை
முகத்தை உற்று
நோக்கினேன்!
எனக்கு மயக்கமா?
இல்லை அவளின் தாகம்!

பூர்வீகம் இல்லாத
புதிய கற்பனை
புத்தகம் அவள்!
என் மனதுக்குள்
துள்ளி விளையாடும்
கலை மான் அவள்!
அவள் தரும்
இன்னல்கள்...?

Wednesday, 2 October 2013

என்னை ஒதுக்கிவிட...

உலகின்
மனிதர்களே!
நான் அன்புக்காக
ஏங்கும் மனிதனா?
இல்லை பற்றற்ற
மிருகமா?
எதையும் சிந்திக்காத
நடை பிம்பமா?
அறிவுப் பசிக்கு
அலையும்
பைத்தியமா?


உங்களில்
யார் என்னை
புரிந்து கொள்வீர்?
என்னை ஒதுக்கிவிட
நினைத்து...
ஒதுங்கிவிடாதீர்!

அதன் பின்
ஒரு உண்மையான
அன்பை...
இழந்து விடுவீர்கள்!

Tuesday, 1 October 2013

அடுத்த... அலை...

அடியே!
உன்னை
வெறுத்து
என் இதயத்தை
சூறாவளியில்
தூக்கி எறிந்தேன்!

கடலுக்குள்
வீழ்ந்த இதயம்
மீண்டும் கரையை
தேடி வந்தது!


அவனோடு
சல்லாபித்த நீ
திருப்பிகொண்டாய்
உன் முகத்தை!

அடுத்த
அலைக்காக...
என் இதயம்
காத்திருக்கிறது!
கடலை நோக்கி
மீண்டும் பயணம்!