Sunday, 7 September 2014

காலையில்...

காலையில்...
கோழி கூவியதால்?
சேவல் அதிர்ந்தது!
வாயை மூடி
அருகில் சென்றதும்,
அரவணைப்பாய்
அன்பு முத்தம்!
அது மட்டுமல்ல
வாழ்வு சத்தமும்!
அப்பப்பா....?
ஆனந்தம்!


காலையில்...
============
காலையில்...
கோழி கூவியதால்?
சேவல் அதிர்ந்தது!
வாயை மூடி
அருகில் சென்றதும்,
அரவணைப்பாய்
அன்பு முத்தம்! 
அது மட்டுமல்ல
வாழ்வு சத்தமும்!
அப்பப்பா....?
ஆனந்தம்!

கவிதை காதலி!

விடலை பருவத்தின்
விக்கித்த வேகம்!
கடலையும் நொடியில்
கடக்கும் மோகம்!


இல்லையடி என்றாலும்...
இறுக்கி கொண்டாள்!
தொல்லையடி என்றாலும்
தொழுது கொண்டாள்?

உருவத்தை விழுங்கினாள்...
உடன் மன்னிப்பும் கேட்டாள்!
அவசரமாய் சல்லாபித்த...
அன்பின் கவிதை காதலி!

கவிதை காதலி!
=============
விடலை பருவத்தின்
விக்கித்த வேகம்!
கடலையும் நொடியில்
கடக்கும் மோகம்!

இல்லையடி என்றாலும்...
இறுக்கி கொண்டாள்!
தொல்லையடி என்றாலும்
தொழுது கொண்டாள்?

உருவத்தை விழுங்கினாள்...
உடன் மன்னிப்பும் கேட்டாள்!
அவசரமாய் சல்லாபித்த...
அன்பின் கவிதை காதலி!

வெட்கத்தால்...

தூறல் நீன்னு போச்சு,
துவட்டினாள்
அவள் கூந்தலை!
நான் அவளின்
கடைக்கண் கண்டு
கண்சிமிட்டினேன்!
வெட்கத்தால்
கன்னம் சிவந்தாள்!


வெட்கத்தால்...
=============
தூறல் நீன்னு போச்சு,
துவட்டினாள்
அவள் கூந்தலை!
நான் அவளின்
கடைக்கண் கண்டு
கண்சிமிட்டினேன்!
வெட்கத்தால்
கன்னம் சிவந்தாள்!

சுவைத்த...

தேனில் விழுந்த
பலா அவள்!
சுவைத்த...
மயக்கத்தில் நான்!
இனிமையில்
தவிக்கின்றேன்!


சுவைத்த...
==========
தேனில் விழுந்த
பலா அவள்!
சுவைத்த...
மயக்கத்தில் நான்!
இனிமையில்
தவிக்கின்றேன்!

முற்றுப் புள்ளி.

செல்லக் கிளியின்...
கள்ளச் சிரிப்பு!
வண்ணக் கோலத்தின்
எண்ணச் சிதறல்?
வாழ்வு வகை தெரியா...
முற்றுப் புள்ளிகள்!


முற்றுப் புள்ளி...
==============
செல்லக் கிளியின்...
கள்ளச் சிரிப்பு!
வண்ணக் கோலத்தின்
எண்ணச் சிதறல்?
வாழ்வு வகை தெரியா...
முற்றுப் புள்ளிகள்!

காதல் விளையாட்டு!

வானம்
தூரம் என்பதால்,
வசப்படவில்லை!
அவளும், நானும்
கை கோர்த்த
பின்னே....
தொட்டு தொட்டு
விளையாண்டோம்?
நீல வானை!


காதல் விலையாட்டு!
==================
வானம்
தூரம் என்பதால்,
வசப்படவில்லை!
அவளும், நானும்
கை கோர்த்த
பின்னே....
தொட்டு தொட்டு
விளையாண்டோம்?
நீல வானை!

புது வெள்ளம்!

அவள்...
என் தாகம்
போக்கிய,
புனை வெல்லம்!


நான்...
அவளின்...
வறட்சி போக்கிய,
புது வெள்ளம்!

புது வெள்ளம்!
============
அவள்...
என் தாகம்
போக்கிய,
புனை வெல்லம்!

நான்...
அவளின்...
வறட்சி போக்கிய,
புது வெள்ளம்!

ஏகாந்த ராகம்!

அவள்...
இசை தரும்,
அழகிய
புல்லாங்குழல்?
இதழ் பதித்தேன்...
ஏகாந்த ராகம்


ஏகாந்த ராகம்!
============
அவள்...
இசை தரும்,
அழகிய
புல்லாங்குழல்?
இதழ் பதித்தேன்...
ஏகாந்த ராகம்

Saturday, 6 September 2014

என்னை...

என்னை
தோள்களில்
சுமந்த தோணி
அவள்!
அலைகழிக்கிறாள்
என் காதலை?


கடும் மழை!

கூவிய கருங்குயில்,
குவிந்தது கருமுகில்,
சூழ்ந்தது கடும் இருள்!


ஏங்கிய நாணலுக்குள்
சின்ன சின்ன
மழைத்துளி...
தூவானம்!

வாடிய பயிருக்கு
வகையான...
கடும் மழை
எப்போது?

தடுமாறுமோ?

இலக்கணம்
மாறுமோ?
இல்லை அவள்...
தலைக்கனம் தான்
மாறுமோ?
இல்லை இல்லை
எங்கள் காதல் தான்...
தடுமாறுமோ?


காசிருந்தால்...

சருகுகளின்
சத்தத்தில்
சமைந்தவள்
அவள்!


இறகுகள்
முளைத்ததால்...
எனை பிரிந்த,
மாடி வீட்டு
ஏழை!

காசிருந்தால்...
வாங்க முடியாத
காதல்!

கரை சேர்க்க?

நீ! என்னை
மறந்து
போனதால்....
கரையோர
கவிதைகள்
தேங்கிவிட்டதடி!
நம் காதலை
கரை சேர்க்க?


ஓடி மறைந்தாய்!

துவண்ட போது
தூக்கி நிறுத்தி
உன் வாயால்...
திருவிளையாடல்
நிகழ்த்தி!
என்னைப் போற்றி
கையில் பிடித்து
தூக்கி நிறுத்தினாய்
சிகரத்தின் உச்சியில்!
சிகரம் தொட்டதால்
நான் வாடிப்போனேன்!
நீ! ஓடி மறைந்தாய்?


காதல்...அழிவு...

உன் கை பிடிக்கும்
முயற்சியில்...
தோற்று போனேன்!

உன் இதயத்தை
சிறை பிடிக்கும்
தளர்ச்சியில்...
வெற்றி கண்டேன்!

காதல்...அழிவு...
இல்லை?

பரிதாபமாய்!

நேரத்தின்
நெருக்கடியில்,
நெருங்கிய அவள்....
காலத்தின் பிடியில்...
சிக்கிக் கொண்டாள்!
அவளின் கோலம்
அலங்கோலமாய்!
எனது மோகம்
பரிதாபமாய்!


அலை....

அவள்...
என் காதோடு
பேசிய காதல் மொழி?
கனவாகிப் போனதே?


என் இதயத்தின்
செல்லக் கிளி,
சிற்பமாய்...
உயிரற்று போனதே?

காதல் மட்டும்...
மனம் விட்டு மனம்
அலை பாயுதே!

பொன்வண்டாய்...

அவளின்...
பூவிழியில்,
கரு வண்டாய்
நான்?


பார்க்கிறேன்...
வெளியுலக
காதல்...
காவியங்களை!

மனக் குகையில்,
வண்ணமிகு
பொன்வண்டாய்...
அவள்!

தேடுகிறாள்
என் இதயத்தை?

சும்மா ஒரு காதல் பாட்டு! (பயந்துடாதீங்க)

கழுத்த சுத்துன
கட்டுவிரியன் பாம்பே!
என் செஞ்சோடு நெஞ்சாக
நெளியிறியே! நீ! நெளியிறியே!


பாவம், பழியும் இல்லையடி
உன் சோகம் மட்டும் தொல்லையடி!
கண்ணுக்குள்ள கண்ண வெச்சி
உனக்குள்ள என்ன வெச்சி,
வெறுங் காத்தா..வெறுங்காத்தா...
என் உசிரு ஊசலாடி போச்சுதடி!

கழுத்த சுத்துன
கட்டுவிரியன் பாம்பே!
என் செஞ்சோடு நெஞ்சாக
நெளியிறியே! நீ! நெளியிறியே!

மோகம் எனக்கு முடங்கி போச்சி
தாகம் எனக்கு அடங்கி போச்சி,
ஆழம் மில்லா காதல் செஞ்சி
காகிதத்தில் கப்பல் விட்டேன்!
வெறுங் கனவா... வெறுங் கனவா...
என் காதல் பாலைவனமா போச்சுதடி!

கழுத்த சுத்துன
கட்டுவிரியன் பாம்பே!
என் செஞ்சோடு நெஞ்சாக
நெளியிறியே! நீ! நெளியிறியே!

சிக்கவில்லை?

கவிதைக்குள்
சிக்கவில்லை?
அவளின் காதல்...
நான் அவளை
கை பிடித்ததால்!


அடங்காத...

அருவி சாரலின்,
அடங்காத...
குளிர் அவள்!

பறக்கும்
பட்டாம் பூச்சியை,
வலைத்திடும்...
வண்னமிகு
வானவில் அவள்!

தெருவில் நான்...
நின்றால்,
தெரித்தோடும்
தென்றல் அவள்!

உயரே பார்த்தால்
இதழ் நனைக்கும்,
கொம்புத் தேன்
அவள்!

அவளும், நானும்,
இன்னமும்
முகம்.....
பார்க்கவில்லை?

மீண்டும் இருள்?

சேவல்
கூவியதும்,
அவள்...
சென்றுவிட்டாள்!


கனவு
கலைந்து
நான்...
வெளிச்சத்தில்,
வெறுத்து
போனேன்!

மீண்டும் இருள்?

என்ன சொல்ல?

நீ! என்று சொல்லி,
தனிமை
படுத்தவில்லை?

நான்! என்று...
சொல்லும்,
அகம்பாவமும்
இல்லை?

நாம் என்று...
சொன்னால்,
வந்திடும்
தொல்லை!

என்ன சொல்ல?
காதல்!!!!!!

குளிரிசை!

பனியில்
நனைந்த...
புது மலர்,
அவள்!


இதழ்...
நுனியில்...
தவழ்ந்த
புல்லாங்குழல்
நான்!

நிழல்!

கோடையிலும்
குளிர்தரும்?
அவளின்...
நிழல்!


கடற்கரை
மணலில்...
அவளும்,
நானும்?

முடிந்த
கவிதையை,
படித்து........
பார்த்தோம்!

தூது செல்ல...

துது செல்ல...
வேண்டாம்?
என் காதலுக்கு!
விழிகளும்,
இத்யமும்...
வெகு தூரம்
இல்லை?
இதய
வலையில்
அவள்????
குனிகிறேன்!

இல்லையடி!

தீண்டிய
குளிரும்,
இதம் தரும்
வெப்பமும்,
சுகம் கூடிய
தென்றலும்,
அகம் கொண்ட
மகிழ்வாய்...
இல்லையடி
உன்னால்?

காதலின் சாரல்?

நீந்த முடியாத
நினைவுகள்!
உணர முடியாத
உல்லாசம்!
இதயத்தில்...
அவளின் துறல்!
காதலின் சாரல்?
எங்கே அவள்??

என் கனவை...

காகித ஓடம்...
கடல் அலை மீது,
எப்படி ஓடும்?

மதியிருந்தால்...
மழை நீரில் விட்டு
ரசித்திருப்பேனே!

என் கனவை...
முடித்திருப்பேனே?

வெட்கம் காட்டும்...


குனிந்த
முகத்தின்,
குவிந்த உதடும்,

விரல் நுழை
வெட்கம் காட்டும்...
சிவக்காத...
கன்னமும்,

தரை பார்த்து
தவிக்கும்...
உன் இமைகளும்,

வானவில் போல்
வளைந்த
கழுத்தும்!

சுமையின் வலி
அறியாத மார்பும்,

கைகளுக்குள்
சிக்கும்...
உன் சின்ன
இடையும்!

அசைந்தாடும்
வெண்ணிலவாய்...
உன் பின்னசைவும்,

கற்பனையில்
கண் முன்னே
தோன்றும்...
தொடைகளும்,

மின்னி மறைந்த
படமெடு நாகத்தின்
கருத்ததோர்
உருவமும்,

முகம் பார்க்கும்
கண்ணாடியாம்...
உன் பாதங்களும்,

ஆடை அணிகலன்
இல்லாமலேயே
அழகாய் இருக்குதடி,
என் இருண்ட
காதலில்?

நிலவின் கறை!

நீல வானின்,
மத்தியிலே
உலா வந்த
என்னை....
அந்த கருப்பு,
வண்ணன்...
கார் முகிலன்
அடிக்கடி தழுவி
போனான்!


மாசு படிந்த
நிலவாய் நான்!
எனக்கொரு...
மகன் பிறந்தால்?
என்ன பெயர்
வைப்பது?
கலங்கிய நிலா!

காதலுக்கு பின்?

ஆற்றுக்குள்
நீச்சலடித்து
அக்கரைக்கு
போனதுவும்,

சேற்றுக்குள்
துழாவி
அல்லி கிழங்கு
எடுத்ததுவும்,
எருமை
மேல் ஏறி
வயல் பயணம்
சென்றதுவும்,
மாட்டு வால்
பிடித்து...
குளத்து நீச்சல்
போட்டதுவும்,
மர பொந்தில்
கிளி பிடித்து,
நாக்கு சுட்டு
பூண்டு தேய்த்து,
தமிழ் பழக...
பழக்கியதும்!
ஓணான் பிடித்து
வாயில்
புகையிலை
திணித்து,
ஆட்டம் போட
வைத்ததுவும்!
சில்லுகோடு
விளையாண்டு
தடுமாறி
விழுந்ததுவும்,
நொண்டி கோடு
விளையாடி,
முட்டிக் கால்
தேய்ந்ததுவும்,
அம்மா அப்பா
விளையாட்டில்,
சாப்பிட்ட பின்
தூங்கியதுவும்,
மறந்ததடி...
மறந்ததடி...
உன் காதலுக்கு
பின்???????????

அவள் உருகி...

தவித்திடும்
தணலுக்கு,
தண்ணீரானேன்!
அவள் உருகி,
கருகி போனாள்!
இப்போது நான்...
சுய நினைவுடன்!

இன்னல்....

இனிய உலகின்
இன்னல் அவள்!
காதலை நோக்கிய
சன்னல் நான்!
காற்றை மட்டுமே...
காண முடியவில்லை?
ரசிக்கிறேன்!



அழகற்ற...

மனம் விட்டு
பேசியதால்...
மயங்கிப் போனேன்!

குணம் கெட்டு
பேசியதால்...
குண்றிப் போனாள்!
அழகற்ற காதல்!