Friday, 31 May 2013
Thursday, 30 May 2013
Wednesday, 29 May 2013
Tuesday, 28 May 2013
புதுத்தாலி!
குனிந்த தலை
நிமிராத...
குலமகளின்
பெருமை!
குவிந்த கைகள்
கும்மாளமிட்ட
மண மேடை
ஊர்வலம்!
சிறு துளிகள்
கண்ணீர்...
சிரிப்பு வராத
பழைய
காதலனுக்கு!
ஒன்றுமறியா
அடிமாடு,
அறிவற்ற
புது கணவன்,
சிரித்துக் கொண்டே
கைக் கோர்த்தான்!
மன நெருடல்கள்...
மணித்துளியில்
கைகள் பிரிந்தன!
காதலுக்காக நஞ்சு
அவள் இறந்தாள்,
புதுத்தாலியுடன்!
நிமிராத...
குலமகளின்
பெருமை!
குவிந்த கைகள்
கும்மாளமிட்ட
மண மேடை
ஊர்வலம்!
சிறு துளிகள்
கண்ணீர்...
சிரிப்பு வராத
பழைய
காதலனுக்கு!
ஒன்றுமறியா
அடிமாடு,
அறிவற்ற
புது கணவன்,
சிரித்துக் கொண்டே
கைக் கோர்த்தான்!
மன நெருடல்கள்...
மணித்துளியில்
கைகள் பிரிந்தன!
காதலுக்காக நஞ்சு
அவள் இறந்தாள்,
புதுத்தாலியுடன்!
வீரத்தமிழ் மகள்!
தொடை நடுங்கி
சிக்கலாய்
சில காலம்
தவித்த தன்மானம்!
வீறுகொண்டு
விரைவாய் எழுந்து
சாத்திவைத்த
அரிவாளை
சட்டென்று எடுத்தாள்!
நேற்று பிறந்த
பெண் மகவை
கள்ளிப்பால் கொடுக்க,
பிடுங்க வந்த
கணவணை
வெட்டி சாய்த்தாள்!
சிரித்துக்கொண்டே
சிறை வாசம்!
சின்ன குழந்தைக்கு
சிறப்பாய் ஒரு...
முத்தம்!
இனியாவது
பெண்ணினம்
தழைக்கட்டும்!
சிக்கலாய்
சில காலம்
தவித்த தன்மானம்!
வீறுகொண்டு
விரைவாய் எழுந்து
சாத்திவைத்த
அரிவாளை
சட்டென்று எடுத்தாள்!
நேற்று பிறந்த
பெண் மகவை
கள்ளிப்பால் கொடுக்க,
பிடுங்க வந்த
கணவணை
வெட்டி சாய்த்தாள்!
சிரித்துக்கொண்டே
சிறை வாசம்!
சின்ன குழந்தைக்கு
சிறப்பாய் ஒரு...
முத்தம்!
இனியாவது
பெண்ணினம்
தழைக்கட்டும்!
Monday, 27 May 2013
சிறைக்கு பின்னும்!
தமிழே!
ஊழ்வினையின்
ஓரத்தில்,
நெஞ்சில் உரமற்று
நிற்கும் அவன்...
உற்சாகத்தின்
கெடுபிடியில்
உன்னை
பல வகையில்
போற்றிப் பாடும்
இளம் கவிஞன்!
நெஞ்சில் மட்டும்
நேர்மை நிறுத்தி,
உலகின் வஞ்சத்தில்
சிக்கி தவிக்கும்
தடைமிகுந்த
மனிதன்!
இருப்பினும்...
சிறைக்கு பின்னும்
சிந்தனை செய்து,
உன்னை செல்லமாய்
கட்டியணைக்க
துடிக்கும்
காதலன்!
ஊழ்வினையின்
ஓரத்தில்,
நெஞ்சில் உரமற்று
நிற்கும் அவன்...
உற்சாகத்தின்
கெடுபிடியில்
உன்னை
பல வகையில்
போற்றிப் பாடும்
இளம் கவிஞன்!
நெஞ்சில் மட்டும்
நேர்மை நிறுத்தி,
உலகின் வஞ்சத்தில்
சிக்கி தவிக்கும்
தடைமிகுந்த
மனிதன்!
சிறைக்கு பின்னும்
சிந்தனை செய்து,
உன்னை செல்லமாய்
கட்டியணைக்க
துடிக்கும்
காதலன்!
Sunday, 26 May 2013
Saturday, 25 May 2013
இருளுக்கு பின் வெளிச்சம்!
குறிப்பறிந்த பின்...
குப்பையில் கிடந்த
குன்றுமணிக்கு
குவிந்தது வெளிச்சம்!
குரோத வழிக்கு பின்...
குணமற்ற மனிதனுக்கு
குறுகியது நெஞ்சம்!
குணத்திற்கு பின்...
குன்றி போனது
குலமகளின் பெருமை!
குருட்டு காதலுக்கு பின்...
குமட்டியது
குமரியிடம் காதல்!
குடி போதைக்கு பின்...
குனிந்து போனது
குன்றிய தத்துவங்கள்!
குலப்பெருமைக்கு பின்
குன்றின் பெருமை?
குட்டு பெற்ற
கும்மிருட்டுக்கள்!
குற்றங்களின்
குவியல்கள்!
குவியும் வெளிச்சம்
குருடனை மாற்றுமா?
குப்பையில் கிடந்த
குன்றுமணிக்கு
குவிந்தது வெளிச்சம்!
குரோத வழிக்கு பின்...
குணமற்ற மனிதனுக்கு
குறுகியது நெஞ்சம்!
குணத்திற்கு பின்...
குன்றி போனது
குலமகளின் பெருமை!
குமட்டியது
குமரியிடம் காதல்!
குடி போதைக்கு பின்...
குனிந்து போனது
குன்றிய தத்துவங்கள்!
குலப்பெருமைக்கு பின்
குன்றின் பெருமை?
குட்டு பெற்ற
கும்மிருட்டுக்கள்!
குற்றங்களின்
குவியல்கள்!
குவியும் வெளிச்சம்
குருடனை மாற்றுமா?
Friday, 24 May 2013
சோகத்தின் பரிசு!
அவசரமாய்
எழுந்தேன்!
அவளின்
கனவுகளுக்கு
விடை கொடுத்தேன்!
தேங்கிய
தெளி நீரில்
குளித்து முடித்தேன்!
மனதில் குளிர்ச்சி!
கண்ணாடி முன்
மதிமயங்கி
ஒப்பனை செய்தேன்!
அவள் அழகின்
ஈடுபாடுகள்!
அமைதியாய்
நடந்தேன்!
அவளின்
நினைவுகளுக்கு
நான் கொடுத்த
இன்ப வேளை!
ஆழ்ந்த சிந்தனையில்
முகம் தடவினேன்!
அவளுக்கு நான்
தந்த காதல் பரிசு
கருந் தாடி!
அவசரத்தில்
சோகம் மறந்தேன்!
மீண்டும் ஏக்கம்
இரவு அழைத்தது
அவளின்
கனவுகளுக்காக!
எழுந்தேன்!
அவளின்
கனவுகளுக்கு
விடை கொடுத்தேன்!
தேங்கிய
தெளி நீரில்
குளித்து முடித்தேன்!
மனதில் குளிர்ச்சி!
கண்ணாடி முன்
மதிமயங்கி
ஒப்பனை செய்தேன்!
அவள் அழகின்
ஈடுபாடுகள்!
அமைதியாய்
நடந்தேன்!
அவளின்
நினைவுகளுக்கு
நான் கொடுத்த
இன்ப வேளை!
ஆழ்ந்த சிந்தனையில்
முகம் தடவினேன்!
அவளுக்கு நான்
தந்த காதல் பரிசு
கருந் தாடி!
அவசரத்தில்
சோகம் மறந்தேன்!
மீண்டும் ஏக்கம்
இரவு அழைத்தது
அவளின்
கனவுகளுக்காக!
Thursday, 23 May 2013
இல்லாத உறவுகள்!
தூண்டாத
நெருப்புக்கு
தூக்கணாங்
குருவியின்
பாட்டு!
உணர்வுக்கு
வைத்த உலை...
வேகாத
செம்பொன்!
பெண்ணுக்காக
பிதற்றல்...
இறுமாப்பில்
இறப்புகள்!
வேண்டும்!
அவள் வேண்டும்!
என்ற சொல்லுக்கு
முள் வேலி!
மலர்...
அவளைப் பறிக்க
தூவானம்
மெருகு கட்டியது!
இல்லாத உறவுக்கு
எழுத்துக்கள்...
தள்ளாத உறவுதான்
காதல்!
தடைகளின்
முனகல்கள்!
நெருப்புக்கு
தூக்கணாங்
குருவியின்
பாட்டு!
உணர்வுக்கு
வைத்த உலை...
வேகாத
செம்பொன்!
பெண்ணுக்காக
பிதற்றல்...
இறுமாப்பில்
இறப்புகள்!
வேண்டும்!
அவள் வேண்டும்!
என்ற சொல்லுக்கு
முள் வேலி!
மலர்...
அவளைப் பறிக்க
தூவானம்
மெருகு கட்டியது!
இல்லாத உறவுக்கு
எழுத்துக்கள்...
தள்ளாத உறவுதான்
காதல்!
தடைகளின்
முனகல்கள்!
Wednesday, 22 May 2013
Tuesday, 21 May 2013
ஏழ்மை!
வற்றிய கன்னம்,
வாசனைத்தூள்,
கருப்பு முகத்தின்
கண்களில்
பளிச்சிடும் ஒளி!
ஒட்டிய உடல்,
உலர்ந்த மேனி,
இல்லாத மார்புக்கு
குறுக்கு மாராப்பு!
அழுக்குத் தலை,
மூன்று நாளாய்
வைத்து வைத்து
எடுத்த...
வாடாமல்லிப் பூ!
அம்மாவின்
அதட்டல்...
அவசரமாய் சீவி,
பழைய பூவை
தலையில் சூடி,
வயலுக்கு
சென்றாள்!
நாற்று நடுதல்
வேலைக்கு!
இரவில் மட்டும்
ஒரு வேளை
உணவுக்காக,
அவளின்
காந்த கண்கள்
பகலில் மட்டும்
வற்றிவிடும்
பசியால்!
வாசனைத்தூள்,
கருப்பு முகத்தின்
கண்களில்
பளிச்சிடும் ஒளி!
ஒட்டிய உடல்,
உலர்ந்த மேனி,
இல்லாத மார்புக்கு
குறுக்கு மாராப்பு!
அழுக்குத் தலை,
மூன்று நாளாய்
வைத்து வைத்து
எடுத்த...
வாடாமல்லிப் பூ!
அம்மாவின்
அதட்டல்...
அவசரமாய் சீவி,
பழைய பூவை
தலையில் சூடி,
வயலுக்கு
சென்றாள்!
நாற்று நடுதல்
வேலைக்கு!
இரவில் மட்டும்
ஒரு வேளை
உணவுக்காக,
அவளின்
காந்த கண்கள்
பகலில் மட்டும்
வற்றிவிடும்
பசியால்!
Monday, 20 May 2013
அடிவானம்...
மயிலின் நடனம்...
வான் கோழியின்
தோகை விரிப்புக்கு
அடிவானம்!
அற்பத்தனம்...
மனிதனின்
பெருமைக்கு
அடிவானம்!
அருவியின்
சலசலப்பு...
மூடுபனியின்
குளிர்ச்சிக்கு
அடிவானம்!
தற்பெருமை...
மனிதனின்
தன்மானத்திற்கு
அடிவானம்!
பகலின் கொடுமை...
நெஞ்சத்தீயின்
கொதிப்புக்கு
அடிவானம்!
அமைதி...
மனிதனின்
உயர்வுக்கு
அடிவானம்!
வான் கோழியின்
தோகை விரிப்புக்கு
அடிவானம்!
அற்பத்தனம்...
மனிதனின்
பெருமைக்கு
அடிவானம்!
அருவியின்
சலசலப்பு...
மூடுபனியின்
குளிர்ச்சிக்கு
அடிவானம்!
தற்பெருமை...
மனிதனின்
தன்மானத்திற்கு
அடிவானம்!
பகலின் கொடுமை...
நெஞ்சத்தீயின்
கொதிப்புக்கு
அடிவானம்!
அமைதி...
மனிதனின்
உயர்வுக்கு
அடிவானம்!
Sunday, 19 May 2013
Saturday, 18 May 2013
உருவமில்லா உறவுகள்!
மூச்சுக்காற்றின்
முடிவிலும்...
உருவம் பெறாத
உறவுகள்!
இறுதி சொட்டு
இரத்தத்திலும்...
கூடவே
ஒரு முனகல்!
எத்தனையோ
பேரிரைச்சல்...
அமைதியாய்
அடிவானத்தின்
ஒளி பிம்பம்!
கதறித்துடிக்கும்
நெஞ்சத்தில்...
மீண்டும்
ஒரு கசங்கிய
மலர்!
உதறித் தெளித்த
பின்னும்...
உருவத்திற்கு
ஓலமிடும்
தெளிந்த நீர்!
கறை படிந்த
காதல்!
முடிவிலும்...
உருவம் பெறாத
உறவுகள்!
இறுதி சொட்டு
இரத்தத்திலும்...
கூடவே
ஒரு முனகல்!
எத்தனையோ
பேரிரைச்சல்...
அமைதியாய்
அடிவானத்தின்
ஒளி பிம்பம்!
நெஞ்சத்தில்...
மீண்டும்
ஒரு கசங்கிய
மலர்!
உதறித் தெளித்த
பின்னும்...
உருவத்திற்கு
ஓலமிடும்
தெளிந்த நீர்!
கறை படிந்த
காதல்!
Friday, 17 May 2013
தலைக்குனிவு!
கொற்றி
கூறு போடப்பட்ட
இரத்தம் தோய்ந்த
தசை பிண்டங்கள்,
கொலை வெறி!
மனிதன் என்ற
சொல்லுக்கு
தலைக்குனிவு!
அடைபட்டு கிடந்த
கொழுப்ப்பின்
சிதறல்...
அவசர மோகம்
வன்புனர்ச்சி!
அன்பு என்ற
வார்த்தைக்கு
தலைக்குனிவு!
உல்லாசக் காற்றில்
ஊர் சுற்றிய பின்பும்,
ஓரமாய் தவிக்கும்
காதலின் இதயம்!
தன்மானம் தடுக்கிறது
கரையேறவில்லை
காதல்...
காதல் என்ற
சொல்லுக்கு
தலைக்குனிவு!
கூறு போடப்பட்ட
இரத்தம் தோய்ந்த
தசை பிண்டங்கள்,
கொலை வெறி!
மனிதன் என்ற
சொல்லுக்கு
தலைக்குனிவு!
கொழுப்ப்பின்
சிதறல்...
அவசர மோகம்
வன்புனர்ச்சி!
அன்பு என்ற
வார்த்தைக்கு
தலைக்குனிவு!
உல்லாசக் காற்றில்
ஊர் சுற்றிய பின்பும்,
ஓரமாய் தவிக்கும்
காதலின் இதயம்!
தன்மானம் தடுக்கிறது
கரையேறவில்லை
காதல்...
காதல் என்ற
சொல்லுக்கு
தலைக்குனிவு!
சண்டை!
கரித்துண்டுகளின்
கிறுக்கல்கள்,
உணர்ச்சிகளின்
ஓங்கல்கள்,
கருவின் இருளில்
அவசரமாய்...
முளைத்த ஓவியம்,
மனித உடலுக்குள்
சிறியதாய்
ஒரு சண்டை!
தன்னிறைவு
எட்டிப்பார்க்கிறது,
கரடு முரடாய்
முயற்சி!
சிதறுகிறது சிற்பம்...
உடல் உறுப்புகளின்
தூண்டல்கள்,
உள்ளுக்குள்ளே
பெரும்புயல்,
வெளியே வந்தது
பனியில் நனைந்த
ரோசாப்பூ!
இப்போதும்...
உடலுக்குள்
பெரிய சண்டை!
.
கிறுக்கல்கள்,
உணர்ச்சிகளின்
ஓங்கல்கள்,
கருவின் இருளில்
அவசரமாய்...
முளைத்த ஓவியம்,
மனித உடலுக்குள்
சிறியதாய்
ஒரு சண்டை!
எட்டிப்பார்க்கிறது,
கரடு முரடாய்
முயற்சி!
சிதறுகிறது சிற்பம்...
உடல் உறுப்புகளின்
தூண்டல்கள்,
உள்ளுக்குள்ளே
பெரும்புயல்,
வெளியே வந்தது
பனியில் நனைந்த
ரோசாப்பூ!
இப்போதும்...
உடலுக்குள்
பெரிய சண்டை!
.
Saturday, 11 May 2013
தாழ்மையின் முனகல்கள்!
வைரம்
மின்னுவதை
எண்ணி,
கரித்துண்டுகள்
கலங்கினால்...
செந்தாமரையின்
புனிதம் எண்ணி
சேற்று மண்
பெருமூச்சு
விட்டால்...
தேனின்
உயர்வு எண்ணி
தேனிக்கள்
கொந்தளித்தால்...
ஊற்று நீரின்
உயர்வு எண்ணி
ஊற்றுக்கண்
வருத்தம்
கொண்டால்...
கனியின்
சுவையை எண்ணி
பழ மரங்கள்
ஏங்கினால்...
உயர்வுகளின்
பெருமை எண்ணி
அடித்தலங்கள்
பொறாமை
கொண்டால்...
அழிவின் காலம்
ஆரவாரம் செய்யும்!
உயர்வுகளை
அடித்தோன்றல்கள்
அசைக்க நினைத்தால்
அற்பத்தனம்!
பிறந்த பெருமை
ஒரு போதும்
மறைவதில்லை!
மனிதனே!
மாற்றானின்
உயர்வுக்கு
பொறாமை
கொள்ளாதே!
உனது முயற்சிக்கு
அடித்தளம் கட்டு!
நீ உயர்வாய்!
மின்னுவதை
எண்ணி,
கரித்துண்டுகள்
கலங்கினால்...
செந்தாமரையின்
புனிதம் எண்ணி
சேற்று மண்
பெருமூச்சு
விட்டால்...
தேனின்
உயர்வு எண்ணி
தேனிக்கள்
கொந்தளித்தால்...
ஊற்று நீரின்
உயர்வு எண்ணி
ஊற்றுக்கண்
வருத்தம்
கொண்டால்...
கனியின்
சுவையை எண்ணி
பழ மரங்கள்
ஏங்கினால்...
உயர்வுகளின்
பெருமை எண்ணி
அடித்தலங்கள்
பொறாமை
கொண்டால்...
அழிவின் காலம்
ஆரவாரம் செய்யும்!
உயர்வுகளை
அடித்தோன்றல்கள்
அசைக்க நினைத்தால்
அற்பத்தனம்!
பிறந்த பெருமை
ஒரு போதும்
மறைவதில்லை!
மனிதனே!
மாற்றானின்
உயர்வுக்கு
பொறாமை
கொள்ளாதே!
உனது முயற்சிக்கு
அடித்தளம் கட்டு!
நீ உயர்வாய்!
Friday, 10 May 2013
Thursday, 9 May 2013
உடலின் பாடம்!
நாசிக்குள்
நுழைந்து
வேதனை
செய்ய வரும்
நச்சுக்களே,
உடனே
விலகுங்கள்
தும்மலின்
கட்டளை!
வயிற்றுக்குள்
புகுந்து
நஞ்சாய் மாறும்
தேவையற்ற
வீணர்களே,
வெளியேறு!
குமட்டலின்
உறுமல்!
உடல் குருதிக்குள்
நுழைந்து
நோய் செய்ய வரும்
கெட்ட மிருகங்களே,
என்னுடன்
போர் செய்ய
வாருங்கள்!
வெள்ளை
அணுக்களின்
ஆரவாரம்!
இதய நெருடலுக்கு
இனிமை செய்ய
வேண்டி...
சோகமே!
உடனே வெளியேறு!
கண்ணீரின்
வேண்டுகோள்!
உடலுக்குள்
எதிரிகளின்
இலக்கு
வெகு நேரம்
நிலைப்பதில்லை!
மனிதனே!
எதிரிகளை
சிந்தித்து தாக்க
உரிமையில்லை
உனக்கு!
தேவையற்றவன்
உலகின்
முதல் எதிரி!
தூக்கி எறி
அவனை!
துன்பம் உனக்கு
தேவையில்லை!
உன் உடலிடம்
பாடம்
கற்றுக்கொள்!
நுழைந்து
வேதனை
செய்ய வரும்
நச்சுக்களே,
உடனே
விலகுங்கள்
தும்மலின்
கட்டளை!
வயிற்றுக்குள்
புகுந்து
நஞ்சாய் மாறும்
தேவையற்ற
வீணர்களே,
வெளியேறு!
குமட்டலின்
உறுமல்!
உடல் குருதிக்குள்
நுழைந்து
நோய் செய்ய வரும்
கெட்ட மிருகங்களே,
என்னுடன்
போர் செய்ய
வாருங்கள்!
வெள்ளை
அணுக்களின்
ஆரவாரம்!
இதய நெருடலுக்கு
இனிமை செய்ய
வேண்டி...
சோகமே!
உடனே வெளியேறு!
கண்ணீரின்
வேண்டுகோள்!
உடலுக்குள்
எதிரிகளின்
இலக்கு
வெகு நேரம்
நிலைப்பதில்லை!
மனிதனே!
எதிரிகளை
சிந்தித்து தாக்க
உரிமையில்லை
உனக்கு!
தேவையற்றவன்
உலகின்
முதல் எதிரி!
தூக்கி எறி
அவனை!
துன்பம் உனக்கு
தேவையில்லை!
உன் உடலிடம்
பாடம்
கற்றுக்கொள்!
Wednesday, 8 May 2013
Tuesday, 7 May 2013
சலனங்கள்!
இதயத்தில் கீறல்!
அய்ந்து நிமிடம்
அமைதி...
கண்ணீர் துளிகள்!
கைகள் கட்டப்பட்டன!
மனிதனின் முயற்சி!
புண்ணுக்கு மருந்து...
ஓய்வு தேம்புகிறது!
வீண் பொழுதின்
கிளர்ச்சிகள்...
சல்லாபம் சிரிக்கிறது!
வானுக்கு வில்!
உயர்வுகளின்
ஓலங்கள் மறைகிறது...
விண்ணில் வெளிச்சம்!
மனிதனின் சலனங்கள்
கூறு போட...
சில நிமிடங்கள்
இயற்கை
தூங்க வேண்டும்!
அய்ந்து நிமிடம்
அமைதி...
கண்ணீர் துளிகள்!
கைகள் கட்டப்பட்டன!
மனிதனின் முயற்சி!
புண்ணுக்கு மருந்து...
ஓய்வு தேம்புகிறது!
வீண் பொழுதின்
கிளர்ச்சிகள்...
சல்லாபம் சிரிக்கிறது!
வானுக்கு வில்!
உயர்வுகளின்
ஓலங்கள் மறைகிறது...
விண்ணில் வெளிச்சம்!
மனிதனின் சலனங்கள்
கூறு போட...
சில நிமிடங்கள்
இயற்கை
தூங்க வேண்டும்!
Monday, 6 May 2013
Friday, 3 May 2013
இரண்டாம் சோகம்!
படபடக்கும்
நெஞ்சத்தில்
பஞ்சனை
விரித்தேன்!
நான்...
இரவு நேரத்தின்
இனிமை எண்ணி
ஆழ்ந்து உறங்கினேன்!
ஓ!
காவலுக்கு நின்ற
சோக நினைவுகள்
எங்கே?
என் புதியக் காதலின்
புதுமைத் தென்றலால்
ஓரமாய்...
விலகிச் சென்றதோ?
இல்லை இல்லை
சோக நினைவுகளே!
காத்திருங்கள்!
என் புதியக்காதலின்
இறுதியில்
இரு மடங்காய்
சோகம் பரிமாறலாம்!
நெஞ்சத்தில்
பஞ்சனை
விரித்தேன்!
நான்...
இரவு நேரத்தின்
இனிமை எண்ணி
ஆழ்ந்து உறங்கினேன்!
ஓ!
காவலுக்கு நின்ற
சோக நினைவுகள்
எங்கே?
என் புதியக் காதலின்
புதுமைத் தென்றலால்
ஓரமாய்...
விலகிச் சென்றதோ?
இல்லை இல்லை
சோக நினைவுகளே!
காத்திருங்கள்!
என் புதியக்காதலின்
இறுதியில்
இரு மடங்காய்
சோகம் பரிமாறலாம்!
Thursday, 2 May 2013
யார் தமிழன்?
யார் தமிழன்?
என்று ஆராய்ந்து,
எந்த தலைவன்
தமிழன் என்று
கேலி பேசி,
மண்ணுக்கு
சொந்த
தமிழனை
சோம்பலாக்கி,
காலங்காலமாய்
வாழ்ந்து வந்த
ஈழத் தமிழர்
எண்ணற்றோரை
இழந்துவிட்டோம்!
மந்த புத்தியால்
மயங்கி கிடக்கும்
தமிழனே!
உனது புலி போன்ற
போர் குணம்
எங்கே?
காளையை அடக்கி
இல்வாழ்வு ஏற்ற
உன் வீரம் எங்கே?
நெஞ்சில் விழுப்புண்
ஏற்கும் துணிவு
எங்கே?
இவை யாவும்
புற நானூற்றுக்கு
மட்டும்...
சொந்தமாக்கிவிட்டு
தூங்கிவிட்டாயா?
தமிழனே!
தொப்புள் கொடி
உறவுகள்...
என்பதால் தான்,
தாய் மண்ணின்
உறவை,
துண்டித்து
மறந்தாயா?
உலகத் தமிழர்கள்
உயிருக்கும் மேலான
சொந்தங்கள் என்று
இனியாவது சொல்!
தமிழனே!
நமது உறவுகளை,
தலைவர்கள்
மட்டும்தான்
காப்பாற்ற
வேண்டுமா?
தமிழர்கள்
அனைவரும்
புயலெனப் புறப்படு
ஈழம் நோக்கி!
நமக்கு ஆயுதம்
தேவையில்லை!
முடிந்தால் ஈழத்தை
மீட்போம்!
இல்லையேல்
நாமும்...
உயிர்கொடுப்போம்!
தமிழனே!
நீ கிளர்ந்து எழு!
தலைவர்கள்
உன்னை தேடி
வருவார்கள்!
என்று ஆராய்ந்து,
எந்த தலைவன்
தமிழன் என்று
கேலி பேசி,
மண்ணுக்கு
சொந்த
தமிழனை
சோம்பலாக்கி,
காலங்காலமாய்
வாழ்ந்து வந்த
ஈழத் தமிழர்
எண்ணற்றோரை
இழந்துவிட்டோம்!
மந்த புத்தியால்
மயங்கி கிடக்கும்
தமிழனே!
உனது புலி போன்ற
போர் குணம்
எங்கே?
காளையை அடக்கி
இல்வாழ்வு ஏற்ற
உன் வீரம் எங்கே?
நெஞ்சில் விழுப்புண்
ஏற்கும் துணிவு
எங்கே?
இவை யாவும்
புற நானூற்றுக்கு
மட்டும்...
சொந்தமாக்கிவிட்டு
தூங்கிவிட்டாயா?
தமிழனே!
தொப்புள் கொடி
உறவுகள்...
என்பதால் தான்,
தாய் மண்ணின்
உறவை,
துண்டித்து
மறந்தாயா?
உலகத் தமிழர்கள்
உயிருக்கும் மேலான
சொந்தங்கள் என்று
இனியாவது சொல்!
தமிழனே!
நமது உறவுகளை,
தலைவர்கள்
மட்டும்தான்
காப்பாற்ற
வேண்டுமா?
தமிழர்கள்
அனைவரும்
புயலெனப் புறப்படு
ஈழம் நோக்கி!
நமக்கு ஆயுதம்
தேவையில்லை!
முடிந்தால் ஈழத்தை
மீட்போம்!
இல்லையேல்
நாமும்...
உயிர்கொடுப்போம்!
தமிழனே!
நீ கிளர்ந்து எழு!
தலைவர்கள்
உன்னை தேடி
வருவார்கள்!
Subscribe to:
Posts (Atom)
























.jpg)
.jpg)
















.jpg)
.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)