வற்றிய கன்னம்,
வாசனைத்தூள்,
கருப்பு முகத்தின்
கண்களில்
பளிச்சிடும் ஒளி!
ஒட்டிய உடல்,
உலர்ந்த மேனி,
இல்லாத மார்புக்கு
குறுக்கு மாராப்பு!
அழுக்குத் தலை,
மூன்று நாளாய்
வைத்து வைத்து
எடுத்த...
வாடாமல்லிப் பூ!
அம்மாவின்
அதட்டல்...
அவசரமாய் சீவி,
பழைய பூவை
தலையில் சூடி,
வயலுக்கு
சென்றாள்!
நாற்று நடுதல்
வேலைக்கு!
இரவில் மட்டும்
ஒரு வேளை
உணவுக்காக,
அவளின்
காந்த கண்கள்
பகலில் மட்டும்
வற்றிவிடும்
பசியால்!
வாசனைத்தூள்,
கருப்பு முகத்தின்
கண்களில்
பளிச்சிடும் ஒளி!
ஒட்டிய உடல்,
உலர்ந்த மேனி,
இல்லாத மார்புக்கு
குறுக்கு மாராப்பு!
அழுக்குத் தலை,
மூன்று நாளாய்
வைத்து வைத்து
எடுத்த...
வாடாமல்லிப் பூ!
அம்மாவின்
அதட்டல்...
அவசரமாய் சீவி,
பழைய பூவை
தலையில் சூடி,
வயலுக்கு
சென்றாள்!
நாற்று நடுதல்
வேலைக்கு!
இரவில் மட்டும்
ஒரு வேளை
உணவுக்காக,
அவளின்
காந்த கண்கள்
பகலில் மட்டும்
வற்றிவிடும்
பசியால்!

No comments:
Post a Comment