Friday, 24 May 2013

சோகத்தின் பரிசு!

அவசரமாய்
எழுந்தேன்!
அவளின்
கனவுகளுக்கு
விடை கொடுத்தேன்!

தேங்கிய
தெளி நீரில்
குளித்து முடித்தேன்!
மனதில் குளிர்ச்சி!

கண்ணாடி முன்
மதிமயங்கி
ஒப்பனை செய்தேன்!
அவள் அழகின்
ஈடுபாடுகள்!


அமைதியாய்
நடந்தேன்!
அவளின்
நினைவுகளுக்கு
நான் கொடுத்த
இன்ப வேளை!

ஆழ்ந்த சிந்தனையில்
முகம் தடவினேன்!
அவளுக்கு நான்
தந்த காதல் பரிசு
கருந் தாடி!

அவசரத்தில்
சோகம் மறந்தேன்!
மீண்டும் ஏக்கம்
இரவு அழைத்தது
அவளின்
கனவுகளுக்காக!

No comments:

Post a Comment