மார்கழி பூவே!
மனம் மாறினாயோ?
காதலர் கண்ணீர் பனித்துளியாய்... உனை நனைக்க, சோகமே உருவாய், நிறம் மாறா இதழ்... விரித்தாயோ? கருப்பு நிறம் தந்து, கண் மூடினாயோ? காதலுக்கு!
எல்லையில்லா வேதனையில் தொல்லை தரும் காதல் நினைவுகள்!
தோல்வியில் துவண்டாலும் என் சுவாச... உயிர்மூச்சாய் இன்பம் தரும் மலரும் நினவுகள்!
துன்பமே இன்பமாய்..., எனது முரண் வாழ்வு!