Thursday, 25 December 2014

இருள் வேதனை? (ஓவியம்: அசோக்)

இன்ப தேசத்தின்,
இனிமை துள்ளல்கள்,
இயந்திர வேகத்தில்
இளமை பரிமாற்றம்!


இனிப்பாய் ஊதிய,
இனிய மகுடிக்கு,
பாம்பாய் படமெடுத்து
அசைந்தாடினேன்!
இசையின் மோகத்தில்,
பம்பரமாய் சுழன்றேன்!



மின்னலடா.......!
நீ தந்த முத்தம்,
இடியாய் இறங்கியது
என் இதயத்தில்!


குளிரில் மிதக்கிறேன்,
புது வெள்ளை மழை!
மீண்டும் மீண்டும்...
சுக போதனையின்
இருள் வேதனை?

No comments:

Post a Comment