Thursday, 25 December 2014

என் கண்கள் மூடி... (ஓவியம்: அசோக்)

கடுங்குளிர்...
கானம் பாடும்,
தேகமெல்லாம்
நடமாடும் வேளையில்
எங்கேயடா போனாய்?
என்னவனே?


இடை மெலிந்து
உடை நழுவியதோ...
என இறுக்கமாய்,
கைக் கட்டினேன்?



துள்ளும் இளமை
துவண்டுவிடாமல்...
எத்தனை நாள்
தனித்திருப்பேன்?

நீ எதிரே வந்தால்?
என் கண்கள்...
உன்னை எரித்து
பொசுக்கிவிடும்!

அவசரமாய்...
அள்ளிக்கொள்...
என் கண்கள் மூடி
பின்புரமாய்...
கட்டியணைத்திடு!
மன்னவனே!

No comments:

Post a Comment