Thursday, 25 December 2014

கண் திறந்ததும்... (ஓவியம்: அசோக்)

கனவு தேசத்தின்,
கலை மகள் நான்!
நினைவு சதுக்கத்தின்
நீந்த முடியாத...
நிலை மகள் நான்!


காலை பொழுதிலும்
கண்மூடிய சிந்தனை,
நீ! தீண்டிய தேகம்...
தீப்பற்றி எரியுதடா?


பார்க்க முடியா...
இருள் நிறைந்த,
வாழ்வா எனக்கு?
ஒளியற்ற கண்களில்...
கோலம் முழுவதும்
பொலிவற்ற காதல்!

காதலையும்...
காமத்தையும் தந்த?
என்னுயிரே....
கண் திறந்ததும்,
நான் உன்னை...
பார்க்க வருவாயா?

No comments:

Post a Comment