Monday, 28 April 2014

காவியம்!

நீ! சூடிக்கொள்வது
பூவல்ல...
எனது புன்னகை!

நீ! பூசிக்கொள்வது
சாயமல்ல...
எனது புரட்சி!

நீ! அணிந்து கொள்வது
அணிகலன் அல்ல...
எனது அழகு!
 
காவியம்!
---------------
நீ! சூடிக்கொள்வது
பூவல்ல...
எனது புன்னகை!

நீ! பூசிக்கொள்வது
சாயமல்ல...
எனது புரட்சி!

நீ! அணிந்து கொள்வது
அணிகலன் அல்ல...
எனது அழகு!

நீ! உடுத்திக்கொள்வது
உடையல்ல...
எனது உள்ளம்!

நீ! சுவாசிப்பது
மூச்சல்ல...
எனது முத்தம்!

நீ! காதலிப்பது
காதலல்ல...
எனது காவியம்!











நீ! உடுத்திக்கொள்வது
உடையல்ல...
எனது உள்ளம்!

நீ! சுவாசிப்பது
மூச்சல்ல...
எனது முத்தம்!

நீ! காதலிப்பது
காதலல்ல...
எனது காவியம்!

காளான்...

நேற்று
பெய்த
மழையில்...
இன்று
முளைத்த
காளான்கள் கூட,
வாழத் 

துடிக்கின்றன!
நம் காதல்...

மட்டும் ஏன்?

புல்லாங்குழல்...

காதலால் சுரம் மீட்ட
துடிதேன் உன்னை!
உன் மேனி தொட்ட
என் விரல்கள் சில்லிட்ட
மாயம்தான் என்ன?


புல்லாங்குழல்...
------------------------
காதலால் சுரம் மீட்ட
துடிதேன் உன்னை!
உன் மேனி தொட்ட 
என் விரல்கள் சில்லிட்ட
மாயம்தான் என்ன?

என் இதழ் பதித்து
புதிய இராகம் 
மீட்டும் போது...
காதல் நதி
கரை புரண்டு
பாய்கிறதே?

மோகப் புயல்
மூச்சுத்திணற
வீசுகிறதே?
நம் காதல் சங்கமம்?

என் இதழ் பதித்து
புதிய இராகம்
மீட்டும் போது...
காதல் நதி
கரை புரண்டு
பாய்கிறதே?

மோகப் புயல்
மூச்சுத்திணற
வீசுகிறதே?
நம் காதல் சங்கமம்?

காதலர்களே!

கலங்காதீர்கள்...
என் எழுதுகோலின் முனை,
உங்களின் இதயங்களை
அன்பாய் வருடும்!

ஏங்காதீர்கள்...
என் அழகுமிகு
தமிழ் சொற்கள்,
உங்களுக்கு ஆறுதல்
சொல்லும்

காதலர்களே!
-------------------
கலங்காதீர்கள்...
என் எழுதுகோலின் முனை,
உங்களின் இதயங்களை
அன்பாய் வருடும்!

ஏங்காதீர்கள்...
என் அழகுமிகு
தமிழ் சொற்கள்,
உங்களுக்கு ஆறுதல்
சொல்லும்

திகைக்காதீர்கள்...
திசையற்ற காதலுக்கு,
எனது கடுஞ்சொற்கள்
வசைபாடும்!

கண்ணீர் சிந்தாதீர்கள்...
எனது கவி வரிகள் 
கண்ணீர் துளிகளை
வெப்பத்தால் போக்கும்!

துன்பப்படாதீர்கள்...
எனது காதல் தோல்வியின்
சுட்ட வடுக்கள்,
உங்களை நட்பால்
மகிழ்விக்கும்!

திகைக்காதீர்கள்...
திசையற்ற காதலுக்கு,
எனது கடுஞ்சொற்கள்
வசைபாடும்!
கண்ணீர் சிந்தாதீர்கள்...
எனது கவி வரிகள்
கண்ணீர் துளிகளை
வெப்பத்தால் போக்கும்!

துன்பப்படாதீர்கள்...
எனது காதல் தோல்வியின்
சுட்ட வடுக்கள்,
உங்களை நட்பால்
மகிழ்விக்கும்!
Like · ·

சர்க்கரை!

தேனும் சர்க்கரையும்
கலந்த உன் தெவிட்டாத
பேச்சில் திசைமாறி,
நானும் உன் மேல் 

காதல் கொண்டேன்!

சர்க்கரை!
--------------
தேனும் சர்க்கரையும்
கலந்த உன் தெவிட்டாத
பேச்சில் திசைமாறி,
நானும் உன் மேல்
காதல் கொண்டேன்!

காதல் வலையில்
சிக்கிய இந்த சிறு மீனை,
உன் கயல் விழியால்...
திரும்பி பார்க்காமல்,
திசை மாறி போன
மாயம்தான் என்ன?

அழகு தேடி...
அலைகின்றாயா?
என் காதலை விட
வேறேது அழகு
இவ்வுலகில்?

காதல் வலையில்
சிக்கிய இந்த சிறு மீனை,
உன் கயல் விழியால்...
திரும்பி பார்க்காமல்,
திசை மாறி போன
மாயம்தான் என்ன?
அழகு தேடி...
அலைகின்றாயா?

என் காதலை விட
வேறேது அழகு
இவ்வுலகில்?

நீ!!!!!!!!!!!!!!!!!!!

நீ! சுற்றி திரிவதால்
என் கண்கள்
பற்றி எரிகிறது!

நீ!!!!!!!!!!!!!!!!!!!
---------------------
நீ! சுற்றி திரிவதால்
என் கண்கள் 
பற்றி எரிகிறது!

என்னை 
ஓலமிடசெய்து,
என் காதலை
ஏலமிட செய்த,
நீயும் ஒரு...
பெண்ணா?

என்னை
ஓலமிடசெய்து,
என் காதலை
ஏலமிட செய்த,
நீயும் ஒரு...
பெண்ணா?

நான்... நீ!

நான் மகிழ்ந்திருக்கும்போது,
நீ எனக்குள் இன்பமாய்,
நான் சோர்ந்திருக்கும்போது
நீ எனக்குள் துன்பமாய்.
நான் நினைத்திருக்கும்போது
நீ எனக்குள் நினைவுகளாய்,
நான் தூங்கியிருக்கும்போது
நீ எனக்குள் கனவுகளாய்,
 

நான்... நீ!
-------------
நான் மகிழ்ந்திருக்கும்போது,
நீ எனக்குள் இன்பமாய்,
நான் சோர்ந்திருக்கும்போது
நீ எனக்குள் துன்பமாய்.
நான் நினைத்திருக்கும்போது
நீ எனக்குள் நினைவுகளாய்,
நான் தூங்கியிருக்கும்போது
நீ எனக்குள் கனவுகளாய்,
நான் ரசித்திருக்கும்போது
நீ எனக்குள் காட்சிகளாய்,
நான் ருசித்திருக்கும்போது
நீ எனக்குள் சுவையாய்,
நான் தனித்திருக்கும்போது
நீ எனக்குள் துணையாய்,
நான் விழித்திருக்கும்போது
நீ எனக்கு மறைவாய்...
யார் நீ? என் காதலிதானே?

நான் ரசித்திருக்கும்போது
நீ எனக்குள் காட்சிகளாய்,
நான் ருசித்திருக்கும்போது
நீ எனக்குள் சுவையாய்,
நான் தனித்திருக்கும்போது
நீ எனக்குள் துணையாய்,
நான் விழித்திருக்கும்போது
நீ எனக்கு மறைவாய்...
யார் நீ? என் காதலிதானே?

பச்சை விளக்கு!

முழு நிலவின்
உல்லாசம்,
மங்கிய நிலவொளி,
அவளின் கண்கள்...
கண்ணீரை விடுவிக்க
காத்திருந்த நேரம்!

எனது நாவின்
நுனி கொண்டு
துடைத்தேன்...
அவளின் கண்ணீரை
சுவைத்தேன்!

பச்சை விளக்கு!
----------------------
முழு நிலவின்
உல்லாசம்,
மங்கிய நிலவொளி,
அவளின் கண்கள்...
கண்ணீரை விடுவிக்க
காத்திருந்த நேரம்!

எனது நாவின்
நுனி கொண்டு
துடைத்தேன்...
அவளின் கண்ணீரை
சுவைத்தேன்!

இச் என்று,
இதழ் பதிக்கும் ஓசை...
அவளின் அன்பு
முத்தம்!
என் கன்னக் கதுப்பில்
அவளின் எச்சில் ஈரம்!
வெற்றிக் காதலின்
பரிமாற்றம்!

காதலுக்கு...
பச்சை விளக்கு!

இச் என்று,
இதழ் பதிக்கும் ஓசை...
அவளின் அன்பு
முத்தம்!
என் கன்னக் கதுப்பில்
அவளின் எச்சில் ஈரம்!
வெற்றிக் காதலின்
பரிமாற்றம்!
காதலுக்கு...
பச்சை விளக்கு!

Thursday, 3 April 2014

கல் நெஞ்சம்!

என் நெஞ்சத்தீயில்
கொஞ்சி விளையாடும்
அவள் நிச்சயமாய்...
ஒரு பெண்ணல்ல!


கல் நெஞ்சம்!
-------------------
என் நெஞ்சத்தீயில்
கொஞ்சி விளையாடும்
அவள் நிச்சயமாய்...
ஒரு பெண்ணல்ல!

காதலில் கஞ்சம்
காரணமாய்...
பொழுது போக்குக்கு,
கபடமாய்...
ஒரு காதல் 
விளையாட்டு!

ஆண்கள்
அவளுக்கு...
கேலிச்சித்திரங்கள்!
காதலின் நெஞ்சமல்ல...
அவளுக்கு கல் நெஞ்சம்!

காதலில் கஞ்சம்
காரணமாய்...
பொழுது போக்குக்கு,
கபடமாய்...
ஒரு காதல்
விளையாட்டு!

ஆண்கள்
அவளுக்கு...
கேலிச்சித்திரங்கள்!
காதலின் நெஞ்சமல்ல...
அவளுக்கு கல் நெஞ்சம்!

உன்னை நினைத்தால்!

கோடை
வெப்பம்
தனலாய்
கொதித்தாலும்,

உன்னை நினைத்தால்!
----------------------------------
கோடைவெப்பம்
தனலாய் கொதித்தாலும்,
உன்னை நினைத்தால்...
சில்லுனு ஒரு மூச்சுக் காற்று!
தவிக்கும் தாகத்தில்,
என் தேகமே குளிர்ச்சியாய்...
மோகத்தில் மூழ்கிவிட்டதே!

உன்னை
நினைத்தால்...
சில்லுனு 

ஒரு மூச்சுக் காற்று!
தவிக்கும் தாகத்தில்,
என் தேகமே 

குளிர்ச்சியாய்...
மோகத்தில் 

மூழ்கிவிட்டதே!

என் தங்கமே!


நான் வீரத்திற்கு
விலையாய்...
என் உயிரை
தந்தாலும்,
எம் தமிழ்
இளஞ்சிங்கங்களின்
வீரத்தின் பரிசாய்...
தமிழ் ஈழம் 

பெற்றோம்!
 

என் தங்கமே!
------------------
நான் வீரத்திற்கு விலையாய்...
என் உயிரை தந்தாலும்,
எம் தமிழ் இளஞ்சிங்கங்களின்
வீரத்தின் பரிசாய்...
தமிழ் ஈழம் பெற்றோம்!
தம்பி! இதோ இனிப்பு தருகிறேன்
சுவைத்து மகிழ்!
இனி தமிழனின் கோட்டையில்
அந்நியனின் மூச்சுக்காற்று கூட
நுழையாமல் காவல் செய்...
தமிழர் தம் உறவால்!

தம்பி! இதோ 
இனிப்பு தருகிறேன்
சுவைத்து மகிழ்!
இனி தமிழனின் 

கோட்டையில்
அந்நியனின் 

மூச்சுக்காற்று கூட
நுழையாமல் 

காவல் செய்...
தமிழர் 

தம் உறவால்!

மரண வரிகள்!

அவள்...
மறைவதை
விரும்புகிறேன்,
எனக்குள்
உதிக்கிறாள்!


அவள்...
உதிர்வதை
விரும்புகிறேன்,
எனக்குள்
தளிர் விடுகிறாள்!

அவள்...
அணைவதை
விரும்புகிறேன்,
எனக்குள்
ஒளிர்கிறாள்!

மரண வரிகள்!
-------------------
அவள்...
மறைவதை
விரும்புகிறேன்,
எனக்குள்
உதிக்கிறாள்!

அவள்...
உதிர்வதை
விரும்புகிறேன்,
எனக்குள்
தளிர் விடுகிறாள்!

அவள்...
அணைவதை
விரும்புகிறேன்,
எனக்குள்
ஒளிர்கிறாள்!

அவள்...
பிரிவதை
விரும்புகிறேன்,
எனக்குள்
கலக்கிறாள்!

அவள்...
கிடைப்பதை
விரும்புகிறேன்,
எனக்குள்
மரணத்தை
விதைக்கிறாள்?

அவள்...
பிரிவதை
விரும்புகிறேன்,
எனக்குள்
கலக்கிறாள்!

அவள்...
கிடைப்பதை
விரும்புகிறேன்,
எனக்குள்
மரணத்தை
விதைக்கிறாள்?

நட்பு...

நேற்று பெய்த மழையில்...
அவசரமாய் தோன்றிய
காளான்கள்!
நட்பின் வரலாறு!

கானல் வரிகளுக்குள்
சிக்கி தவித்தாலும்
அழியாத ஒன்று நட்பு!
உயர்வை உயர்வாய்
போற்றிடவும்,
இகழ்வை இகழ்வாய்
ஏற்றிடவும்,
மன மாற்றம் செய்யும்
கருவியாய்... நட்பு!
இயல்பான எரிச்சலில்...
சீறிப்பாய துடித்தாலும்,
மனதிற்கு போடும்
முட்டுக்கட்டையாய் நட்பு!

நட்பு...
--------
நேற்று பெய்த மழையில்...
அவசரமாய் தோன்றிய
காளான்கள்!
நட்பின் வரலாறு!

கானல் வரிகளுக்குள்
சிக்கி தவித்தாலும்
அழியாத ஒன்று நட்பு!

உயர்வை உயர்வாய்
போற்றிடவும்,
இகழ்வை இகழ்வாய்
ஏற்றிடவும்,
மன மாற்றம் செய்யும்
கருவியாய்... நட்பு!

இயல்பான எரிச்சலில்...
சீறிப்பாய துடித்தாலும்,
மனதிற்கு போடும்
முட்டுக்கட்டையாய் நட்பு!

இருந்தவன் இறந்த பின்னும்
புகழ் கொடி கட்டி...
வான்வெளியில் ஒளி தரும்
உன்னத ஒளிபிழம்பு... நட்பு!

வேதனையில் இன்பம் தந்தும்,
இன்பத்தில் இளைப்பாறுதலும்,
துன்பத்தில் துணையாயும்,
ஒன்றுக்குள் ஒன்றாய்
உல்லாசம் பெறுவதும்,
நட்பின் இலக்கணம்!

இருந்தவன் இறந்த பின்னும்
புகழ் கொடி கட்டி...
வான்வெளியில் ஒளி தரும்
உன்னத ஒளிபிழம்பு... நட்பு!
வேதனையில் இன்பம் தந்தும்,
இன்பத்தில் இளைப்பாறுதலும்,
துன்பத்தில் துணையாயும்,
ஒன்றுக்குள் ஒன்றாய்
உல்லாசம் பெறுவதும்,
நட்பின் இலக்கணம்!