Thursday, 3 April 2014

நட்பு...

நேற்று பெய்த மழையில்...
அவசரமாய் தோன்றிய
காளான்கள்!
நட்பின் வரலாறு!

கானல் வரிகளுக்குள்
சிக்கி தவித்தாலும்
அழியாத ஒன்று நட்பு!
உயர்வை உயர்வாய்
போற்றிடவும்,
இகழ்வை இகழ்வாய்
ஏற்றிடவும்,
மன மாற்றம் செய்யும்
கருவியாய்... நட்பு!
இயல்பான எரிச்சலில்...
சீறிப்பாய துடித்தாலும்,
மனதிற்கு போடும்
முட்டுக்கட்டையாய் நட்பு!

நட்பு...
--------
நேற்று பெய்த மழையில்...
அவசரமாய் தோன்றிய
காளான்கள்!
நட்பின் வரலாறு!

கானல் வரிகளுக்குள்
சிக்கி தவித்தாலும்
அழியாத ஒன்று நட்பு!

உயர்வை உயர்வாய்
போற்றிடவும்,
இகழ்வை இகழ்வாய்
ஏற்றிடவும்,
மன மாற்றம் செய்யும்
கருவியாய்... நட்பு!

இயல்பான எரிச்சலில்...
சீறிப்பாய துடித்தாலும்,
மனதிற்கு போடும்
முட்டுக்கட்டையாய் நட்பு!

இருந்தவன் இறந்த பின்னும்
புகழ் கொடி கட்டி...
வான்வெளியில் ஒளி தரும்
உன்னத ஒளிபிழம்பு... நட்பு!

வேதனையில் இன்பம் தந்தும்,
இன்பத்தில் இளைப்பாறுதலும்,
துன்பத்தில் துணையாயும்,
ஒன்றுக்குள் ஒன்றாய்
உல்லாசம் பெறுவதும்,
நட்பின் இலக்கணம்!

இருந்தவன் இறந்த பின்னும்
புகழ் கொடி கட்டி...
வான்வெளியில் ஒளி தரும்
உன்னத ஒளிபிழம்பு... நட்பு!
வேதனையில் இன்பம் தந்தும்,
இன்பத்தில் இளைப்பாறுதலும்,
துன்பத்தில் துணையாயும்,
ஒன்றுக்குள் ஒன்றாய்
உல்லாசம் பெறுவதும்,
நட்பின் இலக்கணம்!

No comments:

Post a Comment