Tuesday, 31 December 2013

சுகம் தந்த சோகம்!

சுற்றி திரிந்து
சுகம் கண்ட
வண்டாய் நான்!
மயங்கியதால்
மாம்பழத்து வண்டு!

இப்போது எனக்கு
மீண்டும் விடுதலை!
மீண்டும் மீண்டும்
அழகை ரசிக்க
புறப்படுகிறேன்!


உடனாய் கிடைத்த
அதிரடி தடை...
அது அவள்
அணிந்திருந்த உடை!
தடங்கலுக்கு
வருந்துகிறேன்!

சுகம் தந்த
சோகமாய்...
மீண்டும் என்னை
மாம்பழத்துக்குள்
புதைத்துக் கொள்வேன்!

விசும்பல்...

உணர்ச்சி
கொந்தளிப்பின்
உன்னத
கொண்டாட்டம்!


பகை என்னிடம்
இனிமையாய்...
விளையாடியபோது,
புன்னகை கூட
கேள்விகுறியாய்
நிற்கும்!

வேதனையின்
விளிம்பில்,
சின்னதாய்...
விசும்பல்!

எச்சரிக்கை!

மனதின்
மறுபக்கம்,
பளிச்சிடும்
சிவப்பு நிற
எச்சரிக்கை!

வீரப்போரில் கூட
புற முதுகு காட்டி
ஓடிவிடும் அவலம்!

பொறுமையின்
விளிம்பில் ஏற்படும்
வரம்பு மீறிய
எரிச்சல்கள்!


தனிமையின்
இனிமையில் கூட...
இறுமாப்பு தரும்
கசப்புகள்!

சிரித்துக்கொண்டே,
என் கவிதைக்கும்
கை காட்டி
சென்றுவிட்ட அவள்....
காதலின் தோல்வி!

Monday, 30 December 2013

வஞ்சகம்!

உன் நெஞ்சத்தில்
மதில் எழுப்பி,
என்னை
மதில் மேல்
பூனையாய்,
நிறுத்தி வைத்த நீ...
வஞ்சகக்காரி!


ஒருபக்கம் காதல்
மறு பக்கம் காமம்,
எந்த பக்கம்
குதித்தாலும்...
என்னை
இழந்துவிடுவேன்
நிச்சயமாய்!

Thursday, 26 December 2013

ஆணுக்கு... பெண்...

குளிருக்கு
இணையாய்
வெப்பத்தின்
சுகம்!


மனைவிக்குகூட
ஆண் துணை
தேடும்...
கணவனின்
அவலம்!

ஆணுக்கு பெண்
சரி நிகர்!
வாழ்க பாரதி!

Tuesday, 24 December 2013

பதவி நீக்கம்

பரிதவிப்பின்
உச்சத்தில்
உல்லாச
ஊஞ்சல்!

வானுக்கும்
மண்ணுக்கும்
நீட்டிய
அளவு கோல்கள்!


தேகத்தை
மன வேகத்தை
அதிகரித்துவிட்டு,
கடிவாளம்
போட்டு விட்ட
கடைசி நிமிட
துணிவு!

அவனுக்கு
அவள் தந்த
நீக்கம்!

Monday, 23 December 2013

நீரோடை!


இதமற்ற
என் வாழ்வில்
கலங்கிய
நீர்த்துளிகள்!

உற்றுநோக்கினேன்
குழப்பங்கள் ஆயிரம்
கண்கள் பூத்தன!


நிலை தவறிய
வாழ்வின்
தெளிந்த
நீரோடையாய்...
என் கண்களில்
எதிர் காலம்
என்றாவது
தெரியுமா?

Sunday, 22 December 2013

புரட்சி!

புன்னைகையின்
ஓரத்தில்
புதுக்கவிதை
பாடிவிட்டு...


அவள் இதழ்
பதித்த முத்தம்
என் சிந்தனையில்
புத்தம் புது புரட்சியாய்!

நான் இப்போது
கவிஞனாய்….
சோக வரிகளுக்கு
உயிர் கொடுக்கிறேன்!

கவிதை!

வரிகளின்
வழிச்சுவடுகளுக்காக,
என் கவிதையின்
சற்று நேர நிதானம்!


போகத் துடித்தும்
வழிதவறிய நினைவு!
வாழ நினைத்தும்
வகையற்ற
நிலைமை!

என் குமுறிய
நெஞ்சத்தின்
இனிய கீறல்கள்
என் பேனா
விடித்த கவிதை!

Saturday, 21 December 2013

கீறல்கள்!

பட்ட மரத்தில்
நிலை தவறிய
அரும் புகள்!!
அவசரமாய்
தோன்றிய
அற்ப பதர்கள்!

முளைக்கத்
தெரிந்தும்
தழைக்க முடியாத
தவிப்புகள்!

வழுக்கு மரத்தின்
வாழ்க்கை
பிரச்னை
ஏற நினைத்தாலும்
இயலவில்லை!


சந்தியில் எற்பட்ட
தடுமாற்றங்கள்
கழுகுகளின்
பிணவாடை
ஆவேசம்!

அச்சமில்லை
என நிமிர்ந்தபோது
அவசரமாய்
தலையில் விழுந்த
அடி!


சரிவான நினைவுகள்
எல்லாம் வெண் திரையின்
மாய பிம்பங்கள்!

பார்க்கத் துடித்து
பழகி முடித்து
வாழ நினைத்தால்
அவளின்
வீணைச் சிரிப்பு
நான் நடுவீதியில்!

இதயத் தேடலின்
இருதி துடிப்புகள்
ஆர்ப்பாட்டம்
செய்யக் கூட
அவசரத் தடை!

அழுத்தத்தினால்
எழுந்திடும்
தவிப்பினால்
தரக்குறைவு!

தனிமையின்
வேட்கை
இனிமை கெட்டது
இனிமையின்
இனிமை
கசந்து போனது!

இனம் புரியா
இன்னல்களின்
வரைமுறையற்ற
கீறல்கள்!

Friday, 20 December 2013

புதைக்குழி!

புயல் விடும் நேரம்
என நான்
நினைத்த போது
திடீரென்று
வெடித்த பூகம்பம்!

தடுமாறிய வழியில்
தடம்மாற அவசரத் தடை!
வேள்வித் தீயின்
கொடுங்குணம்
அவளின் பழிப்படலம்!


என்னை
நல்வழிபடுத்த,
அவள் அழைத்து
சென்ற இடம்
புதைக் குழி!

என் உயிர்
அடங்கும்போதாவது
உண்மைக் காதல்
தளிர் விடுமா?

Thursday, 19 December 2013

சொல்லாமலே!

என் மனம்
வருடிய போதெல்லாம்,
என் தலை நீவி
என்னை இதமாக்கி
தந்தவள்!

என் சோகத்தை கூட
சுகமாய் மாற்றி,
என்னை இளைப்பாற
செய்தவள்!

என் மகிழ்ச்சியை
தனதாகிக்கொண்டு,
அதனை எனக்கே
தானமாய் தந்தவள்!


நான் அடியெடுத்து
வைத்த போதெல்லாம்,
தோள் கொடுத்து
என்னை அடிபிறழாமல்
காத்தவள்!

என் கண்ணீர்த்துளிக்கு கூட
காவலாய் நின்ற
எனது பாசவலை யார்?
உங்களுக்கு சொல்லாமலே
என் மனதுக்குள்!

Wednesday, 18 December 2013

கவி... காதல்!

கண்ணே!
உன் விழி மேல்
தெரிகின்ற
குருதிச் சுவடுகள்
எல்லாம்...
நான் உனை
நினைத்து
இனிமையாய்
வடித்த கவிதை
வரிகள்!


உன் இமைகள்
மூடுகிற
போதெல்லாம்...
நல்ல கனவுகள்
படைக்கும்!

உன் நினைவுகளை
காந்தமயமாக்கி,
காதல் மின்சாராம்
தரும் என் கவிவரிகள்!

ஓர் எச்சரிக்கை!
பெண்ணே...
மறந்தும் கண்ணீர்
சிந்தாதே!
உண்மை அன்பு
அழிந்து போகும்!
என் கவிதை வரிகள்
அழிந்து போகும்!

Saturday, 14 December 2013

ஓலங்கள்!

நிலையற்ற
உயிருக்கு
மனிதன்
செய்யும்
ஆர்ப்பாட்டம்!

உரமற்ற
நெஞ்சத்தில்
உன்னதத்தின்
வெறியாட்டம்!


ஆடுவார்
ஆடட்டும்,
பாடுவார்
பாடட்டும்,
உயிர் போக
தடையில்லை!

வானுக்கும்
பூமிக்கும்,
நிமிட நேர
உறவுகொள்ளும்
மனித உயிர்..?

Friday, 6 December 2013

என் மனைவியை மட்டும்...

அன்று
அவளுடன்
நான் உறவு
செய்தபோது...
எனக்குள்ளே
ஒருத்தியாய்...
என் நினைவுகளின்
நிழலாய்!

வழிந்த
கண்ணீரைகூட
துச்சமாய்
வீசிய அவள்?

நான் சோகம்
கொண்ட
போதெல்லாம்
சுகம் தந்த
அவள்?


என் இடர்பாட்டுக்குள்
தானாகவே
சிக்கி தவித்த அவள்?

இன்று
என் மனதுக்குள்
அடைபட்ட
புற்றீசலாய்,
கொத்தி குதறும்
கழுகாய்...

என்னை வாட்டி
வதைக்கும் இவள்...
என் மனைவியை
மட்டும்
சிந்திக்கிறாள்!

Thursday, 5 December 2013

உல்லாச வாழ்வு!

செருக்கில்
சிதறிய
சின்ன இதயத்தின்
வழி தவறிய
சுவடுகள்!

அவள்...
சிரிப்பில் ஊறிய
எண்ணங்களின்
ஏமாற்றம்!

தடுமாற்றம் தந்த
உரு மாறிய
வஞ்சனைகளின்
சல்லாபங்கள்!


சுடுகாட்டில் கூட
எரிந்த என்
மண்டை ஓட்டை
உருட்டி விளையாடும்
குள்ள நரிகள்!

மனம் மாறியதால்,
வெறுப்பையே
சுவைக்கிறேன்!
நடை பிணமாய்
வாழ்கிறேன்!

ஊருணியில்
ஊற்று நீரை
அள்ளிப் பருக
துடிக்கும் நான்
தாகத்துடன்!

வானம்...
திறந்த வெளி
சிக்கலில்லை
என்று புறப்பட்டேன்!
வெகு தூரம்
ஏமாற்றம்!

தடுமாறியதால்...
எரியும் கனலில்
என் உல்லாச வாழ்வு!

கேள்விகள்!

கால அடிச்சுவட்டில்
இறுதியில் இனிமை
கண்டவன் நான்!

கறை படிந்த
வாழ்வில்,
வெண்மையின்
திரட்சி கிடைக்குமா?
என்ற ஏக்கம்!


சோகப் புயலில்
சிக்கிய சிறுமணல்
நான்!

சொந்தம் கொண்டாட
ஆயிரம் பேர்!
சுகம் கொண்டாட
யாரோ...?

யார் பாடும்
தாலாட்டில்
எனக்கு தூக்கம்?
விடையில்லை!


இனிமையாய் ஏற்கிறேன்!

என் தூரத்து
பயணத்தில்,
வழியெங்கும்
தடங்கல்கள்!

என் இலக்கை
நினைக்கிறேன்,
துணிந்து
பயணிக்கிறேன்!

அவளை அடைய
துடிக்கிறேன்!
என் காதல்
நெஞ்சத்தை
கலக்கிய அவள்...


ஒடோடி வந்து
அன்பு பரிசாய்
ஒரு துளி நஞ்சும்,
இறுதி முத்தமும்
தந்தாள்!

இதையும்
இனிமையாய்
ஏற்கிறேன்!
இனி நான்
என் இறுதி
பயணம் நோக்கி!

தவிர்க்கிறேன்!

ஆர்ப்பாட்டம்
செய்து,
ஆரவாரம்
செய்த
என் உடலில்
இனியும்
உரமில்லை!

மனத்தளவில்
துணிவு கொள்ள,
சோகத்தையே
சுகமாய் சுமந்த
என் இதயம்
மறுக்கிறது!


சிறகொடிந்த
பின்னே...
இறுமாப்பு
எதற்கு?

இள நரைக்கு
பின்னே...
மோகப்புயல்
எதற்கு?
தவிர்க்கிறேன்!

உணர்ந்து வாழ்!

தேகம்
குலைக்கும்
சந்தேகம்
விடுத்து,

மோகம்
தவிர்க்கும்
நற்செயலில்
ஈடுபட்டு,


வேகம் தரும்
விளைவுகளை
குறைத்து,

நலம் தரும்
இனிமைகளை
சுவைத்து,

ஊக்கம் கொண்டு
உணர்ந்து வாழ்
இனிமையாய்!

Wednesday, 4 December 2013

உலவப் போகிறாய்?

இலைகள் பரவி
முகம் புதைத்த
பனித்துளியாய்,
இரவு முழுவதும்
என் மேல்...
தாகம் கொண்டு,
வெறுப்புடன்
பகலில்
விலகுகிறாயே?


நான் என்ன
உன் கபட
நாடகத்தில்
வஞ்சிக்க
பட்டவனா?

அடியே!
இலையுதிர்
காலத்தில்
இலைகளும்
உதிரும்,
அன்று நீ!
பனித்துளியாய்...
அல்ல! அல்ல!!
என் நெஞ்ச
கொதிப்பில்,
நீராவியாய்தான்
உலவப்போகிறாய்!