Sunday, 31 March 2013
Saturday, 30 March 2013
Friday, 29 March 2013
அன்பும் முக்கனியும்!
அன்பு
அது இறுதியாய்
இனிக்கும்!
இன்பத்தில்
துவங்கும் அன்பு
மாங்கனி போல்!
உள்ளே
விதையெனும்
இடையூறை
சுமந்திருக்கும்!
இன்னலில்
தோன்றும் அன்பு
வாழையை போல்!
இனிப்பாய் சுவைக்க
சிறு தோல் மட்டுமே
தடையாயிருக்கும்!
தடங்கலுக்கு பின்
தோன்றும் அன்பு
பலாவைப் போல்!
போராடிப் பெற்ற
சுளையின் இனிமை
இன்பமாயிருக்கும்!
அது இறுதி வரை
நம்மை காத்திருக்கும்!
அது இறுதியாய்
இனிக்கும்!
இன்பத்தில்
துவங்கும் அன்பு
மாங்கனி போல்!
உள்ளே
விதையெனும்
இடையூறை
சுமந்திருக்கும்!
இன்னலில்
தோன்றும் அன்பு
வாழையை போல்!
இனிப்பாய் சுவைக்க
சிறு தோல் மட்டுமே
தடையாயிருக்கும்!
தடங்கலுக்கு பின்
தோன்றும் அன்பு
பலாவைப் போல்!
போராடிப் பெற்ற
சுளையின் இனிமை
இன்பமாயிருக்கும்!
அது இறுதி வரை
நம்மை காத்திருக்கும்!
Thursday, 28 March 2013
Wednesday, 27 March 2013
மரண போராட்டம்!
கனவுகள்
கைகோர்த்து
அழைத்து
சென்றது!
அனால்...
நினைவுகள்
ஆரவாரம்
செய்தது!
கனவுகளும்
கரைசேர
போவதில்லை,
நினைவுகளும்
நிலைக்க
போவதில்லை!
ஓய்வு...
எனைப்பார்த்து
சிரிக்கிறது!
நான்
அதனிடம்
செல்கிறேன்!
அதற்குள்...
அமைதி
என்னை
அவசரமாய்
தழுவி
கொண்டது!
நான்
அமைதியாய்
இருக்கிறேன்!
மரணம்...
என்னை
தழுவ
மறுக்கிறது!
வருந்துகிறேன்!
கைகோர்த்து
அழைத்து
சென்றது!
அனால்...
நினைவுகள்
ஆரவாரம்
செய்தது!
கனவுகளும்
கரைசேர
போவதில்லை,
நினைவுகளும்
நிலைக்க
போவதில்லை!
ஓய்வு...
எனைப்பார்த்து
சிரிக்கிறது!
நான்
அதனிடம்
செல்கிறேன்!
அதற்குள்...
அமைதி
என்னை
அவசரமாய்
தழுவி
கொண்டது!
நான்
அமைதியாய்
இருக்கிறேன்!
மரணம்...
என்னை
தழுவ
மறுக்கிறது!
வருந்துகிறேன்!
Tuesday, 26 March 2013
Monday, 25 March 2013
Sunday, 24 March 2013
Saturday, 23 March 2013
முரண்பாடுகள்...
விழித்திரையின்
முன்....
மங்கலாய்
தோன்றும்
பிரதி பிம்பங்கள்!
தனி மனித
வாழ்க்கையில்
கரடு முரடாய்
தோன்றும்
சிந்தனை
செருக்குகள்!
உடன் படுவது
மனித நேயம்!
முரண்படுவது
மனித எழுச்சி!
முரண்பாடுகள்
இயற்கையின்
படைப்பில்
தோன்றினால்
அது அழகு!
மனிதனுக்கு
ஏற்பட்டால்
அது மாற்றம்!
மனித மாற்றம்
மனித நேயத்தின்
மாபெரும் இலக்கு!
இந்த மாற்றங்கள்
முரண்பாடுகளின்
வழித்தோன்றல்கள்!
முரண்பாடு
முழு மனிதனை
நிச்சயம்
உருவாக்கும்!
முன்....
மங்கலாய்
தோன்றும்
பிரதி பிம்பங்கள்!
தனி மனித
வாழ்க்கையில்
கரடு முரடாய்
தோன்றும்
சிந்தனை
செருக்குகள்!
உடன் படுவது
மனித நேயம்!
முரண்படுவது
மனித எழுச்சி!
முரண்பாடுகள்
இயற்கையின்
படைப்பில்
தோன்றினால்
அது அழகு!
ஏற்பட்டால்
அது மாற்றம்!
மனித மாற்றம்
மனித நேயத்தின்
மாபெரும் இலக்கு!
இந்த மாற்றங்கள்
முரண்பாடுகளின்
வழித்தோன்றல்கள்!
முரண்பாடு
முழு மனிதனை
நிச்சயம்
உருவாக்கும்!
Friday, 22 March 2013
இயந்திர காதல்!
வா எலிசா!
ஏன் அழைத்தாய்
பீட்டர்சன்?
என்னுடன்
பேசு!
என்ன பேச
வேண்டும்?
காதல் மொழி!
அப்படியென்றால்?
கேள்வி பட்டதில்லையா
காதல் பற்றி?
பட்டிருக்கிறேன்!
ஏன் நாமும்
காதல் செய்யக் கூடாது!
செய்யலாம்!
பீட்டர்சன்!
உணர்ச்சியற்ற காதல்
எப்படியிருக்கும்?
உணர்ந்த பின்
தெரியும்!
கட்டித்தழுவ
ஆசையா?
தயாராயிருக்கிறேன்!
முதலில் முத்தமா?
மிகவும் சரி!
ஆ! அய்யோ!
இயந்திரங்களின்
நேர் முனையும்
எதிர் முனையும்
ஒன்றானதால்,
பீட்டர்சன்னும்
எலிசாவும்
செயலிழந்தார்கள்!
ஆம்!
இனி இயந்திர
மனிதர்கள்
இயங்க
மறந்தார்கள்!
ஏன் அழைத்தாய்
பீட்டர்சன்?
என்னுடன்
பேசு!
என்ன பேச
வேண்டும்?
காதல் மொழி!
அப்படியென்றால்?
கேள்வி பட்டதில்லையா
காதல் பற்றி?
பட்டிருக்கிறேன்!
ஏன் நாமும்
காதல் செய்யக் கூடாது!
செய்யலாம்!
பீட்டர்சன்!
உணர்ச்சியற்ற காதல்
எப்படியிருக்கும்?
உணர்ந்த பின்
தெரியும்!
கட்டித்தழுவ
ஆசையா?
தயாராயிருக்கிறேன்!
முதலில் முத்தமா?
மிகவும் சரி!
ஆ! அய்யோ!
இயந்திரங்களின்
நேர் முனையும்
எதிர் முனையும்
ஒன்றானதால்,
பீட்டர்சன்னும்
எலிசாவும்
செயலிழந்தார்கள்!
ஆம்!
இனி இயந்திர
மனிதர்கள்
இயங்க
மறந்தார்கள்!
Thursday, 21 March 2013
மாமன் மகளே! (கிராமிய நடை)
என் மாமன்
மகளே!
முத்திவிட்ட
தேன் கரும்பே!
தேஞ்ச மகன்
நானிருக்க
நலங்குலஞ்சி
நிப்பதுமேன்!
தேர் பவனி
வருகுதுன்னு
தெருவெல்லாம்
சொன்னாக!
ஊர் பவனி
நானும் வர
காத்திருக்கேன்
சில நாளா!
பாவி மக
போனியேடி
பரிதவிக்க
விட்டுவிட்டு!
அரச்சி வச்ச
சந்தனமா
தெருவெல்லாம்
மணக்குறியே!
ஆட்டிவிட்ட
கொம்பு போல
என் மனசு
தவிக்குதடி!
ஆச மச்சான்
நானிருக்கேன்
ஓடி வந்து
ஒட்டிக்கடி!
உன் வாழ்வ
சுமந்துக்கடி!
அழுது அழுது
தேம்பாதடி!
அடி மனசு
நோகாதடி!
கை பிடிக்க
காத்திருக்கேன்
கலகலன்னு
ஓடி வாடி!
மகளே!
முத்திவிட்ட
தேன் கரும்பே!
தேஞ்ச மகன்
நானிருக்க
நலங்குலஞ்சி
நிப்பதுமேன்!
தேர் பவனி
வருகுதுன்னு
தெருவெல்லாம்
சொன்னாக!
ஊர் பவனி
நானும் வர
காத்திருக்கேன்
சில நாளா!
பாவி மக
போனியேடி
பரிதவிக்க
விட்டுவிட்டு!
அரச்சி வச்ச
சந்தனமா
தெருவெல்லாம்
மணக்குறியே!
ஆட்டிவிட்ட
கொம்பு போல
என் மனசு
தவிக்குதடி!
ஆச மச்சான்
நானிருக்கேன்
ஓடி வந்து
ஒட்டிக்கடி!
உன் வாழ்வ
சுமந்துக்கடி!
அழுது அழுது
தேம்பாதடி!
அடி மனசு
நோகாதடி!
கை பிடிக்க
காத்திருக்கேன்
கலகலன்னு
ஓடி வாடி!
கோபம்!
மனிதனின்
சிறு புத்திக்கு
சூட்டப்பட்ட
மறு பெயர்!
சிறு வளையத்தில்
சிக்கி தவிக்கும்
மனிதனுக்கு,
அடிக்கடி
தோன்றும்
பகல் கனவு!
பெண்கள்
நேரம் வரும்
போதெல்லாம்
கை கோர்த்து
விளையாடும்
கைக்குழந்தை!
ஆண்களின்
மனதில்
எப்போதாவது
வரும் தூவானம்!
சென்றடையும்
பொருளையும்,
புறப்பட்ட
இடத்தையும்
சமமாய்
புண்ணாக்கும்
அளவுகோல்!
கோபத்தை
உதிர்த்தவன்
மனதில் நலம்
பெறுவான்!
கோபத்தை
போற்றுபவன்
கோபம் எனும்
தீயில் சிக்கி
தவிப்பான்!
கோபம்
என்றாவது
தோன்றும்
தாகம்!
அதனையே
மோகமாய்
கொள்வது
தவறு!
சிறு புத்திக்கு
சூட்டப்பட்ட
மறு பெயர்!
சிறு வளையத்தில்
சிக்கி தவிக்கும்
மனிதனுக்கு,
அடிக்கடி
தோன்றும்
பகல் கனவு!
பெண்கள்
நேரம் வரும்
போதெல்லாம்
கை கோர்த்து
விளையாடும்
கைக்குழந்தை!
ஆண்களின்
மனதில்
எப்போதாவது
வரும் தூவானம்!
சென்றடையும்
பொருளையும்,
புறப்பட்ட
இடத்தையும்
சமமாய்
புண்ணாக்கும்
அளவுகோல்!
கோபத்தை
உதிர்த்தவன்
மனதில் நலம்
பெறுவான்!
கோபத்தை
போற்றுபவன்
கோபம் எனும்
தீயில் சிக்கி
தவிப்பான்!
கோபம்
என்றாவது
தோன்றும்
தாகம்!
அதனையே
மோகமாய்
கொள்வது
தவறு!
Wednesday, 20 March 2013
Tuesday, 19 March 2013
அவளுக்காக...
நான்...
உதடுகளின்
பரிமாற்றத்திற்கு
இன்னமும்
காத்திருக்கிறேன்
அவளுக்காக!
அவள்...
எனது உடல்
புத்துணர்ச்சிக்காக
இன்னமும்
காத்திருக்கிறாள்!
நான்...
கலசத்திற்கு
மெருகேற்ற
துடிக்கிறேன்!
அவள்...
எனது இதய
மாளிகையின்
புனிதத்தை
கலங்கப்படுத்த
விரும்புகிறாள்!
நானும்
அவளும்
காதலிக்கிறோம்!
இருவருக்கும்
அவசரம்!
என்னுடைய
உடல்
அவளுக்கும்,
அவளுடைய
உள்ளம்
எனக்கும் தேவை!
நெருங்கினால்
நசுங்க போவது
காதல்!
காதலின்
தூய்மைக்காக
இன்னமும்
என் இதயம்,
தூரத்தில்
காத்திருக்கிறது
அவளுக்காக!
உதடுகளின்
பரிமாற்றத்திற்கு
இன்னமும்
காத்திருக்கிறேன்
அவளுக்காக!
அவள்...
எனது உடல்
புத்துணர்ச்சிக்காக
இன்னமும்
காத்திருக்கிறாள்!
நான்...
கலசத்திற்கு
மெருகேற்ற
துடிக்கிறேன்!
அவள்...
எனது இதய
மாளிகையின்
புனிதத்தை
கலங்கப்படுத்த
விரும்புகிறாள்!
நானும்
அவளும்
காதலிக்கிறோம்!
இருவருக்கும்
அவசரம்!
என்னுடைய
உடல்
அவளுக்கும்,
அவளுடைய
உள்ளம்
எனக்கும் தேவை!
நெருங்கினால்
நசுங்க போவது
காதல்!
காதலின்
தூய்மைக்காக
இன்னமும்
என் இதயம்,
தூரத்தில்
காத்திருக்கிறது
அவளுக்காக!
Monday, 18 March 2013
கால புத்தகம்!
மனிதா!
கவலையற்று
சுழன்று வரும்
இப்பூவுலகில்,
நீ மட்டும் ஏன்...
உன்மனதை
காதலால்
கறைபடிய
விட வேண்டும்!
உன் பணியில்
புதுமைசெய்!
புதுமையை
புரட்சியாய்
மாற்று!
பிறந்த
மண்ணுக்கு
மாலை சூட்ட
புறப்படு!
உனது நல்ல
செயல்களை
இவ்வுலகிற்கு
காணிக்கை
செய்!
அதன்பின்
இவ்வுலகம்
உன்னை
துணையாக்கி
கொள்ளும்!
காலப்புத்தகத்தில்
நீயும் இடம்பெறுவாய்
நிச்சயமாய்!
கவலையற்று
சுழன்று வரும்
இப்பூவுலகில்,
நீ மட்டும் ஏன்...
உன்மனதை
காதலால்
கறைபடிய
விட வேண்டும்!
உன் பணியில்
புதுமைசெய்!
புதுமையை
புரட்சியாய்
மாற்று!
பிறந்த
மண்ணுக்கு
மாலை சூட்ட
புறப்படு!
உனது நல்ல
செயல்களை
இவ்வுலகிற்கு
காணிக்கை
செய்!
அதன்பின்
இவ்வுலகம்
உன்னை
துணையாக்கி
கொள்ளும்!
காலப்புத்தகத்தில்
நீயும் இடம்பெறுவாய்
நிச்சயமாய்!
Sunday, 17 March 2013
வருத்தம்!
பிரிவுகள்
புள்ளி
வைக்கும்போது,
உறவுகள்
கோலம்
போடுகிறது!
மனிதன்
நசுங்கும்போது
உலகம்
சிரிக்கிறது!
குற்றுச்செடி
தவிக்கும்போது
ஆலமரம்
ஆரவாரம்
செய்கிறது!
இறந்த பின்னே
உடல்கள்
கழுகுக்கு
இறையாகிறது!
மாற்றங்கள்
ஒவ்வொன்றும்
ஒரு பகுதிக்கு
மகிழ்ச்சிதான்
தருகிறது!
ஆனால்
உனை பிரிந்து
நானும்,
எனை பிரிந்து
நீயும்,
வருத்தமாய்
இருக்கிறோம்!
நாமிருவர்க்கு
மகிழ்ச்சி
எப்போது?
புள்ளி
வைக்கும்போது,
உறவுகள்
கோலம்
போடுகிறது!
மனிதன்
நசுங்கும்போது
உலகம்
சிரிக்கிறது!
குற்றுச்செடி
தவிக்கும்போது
ஆலமரம்
ஆரவாரம்
செய்கிறது!
இறந்த பின்னே
உடல்கள்
கழுகுக்கு
இறையாகிறது!
மாற்றங்கள்
ஒவ்வொன்றும்
ஒரு பகுதிக்கு
மகிழ்ச்சிதான்
தருகிறது!
ஆனால்
உனை பிரிந்து
நானும்,
எனை பிரிந்து
நீயும்,
வருத்தமாய்
இருக்கிறோம்!
நாமிருவர்க்கு
மகிழ்ச்சி
எப்போது?
Saturday, 16 March 2013
அவசர மோகத்தின் கருகல்!
மலர்ந்த பூக்கள்
உதிர துடிக்கின்றன!
அருகினிலே
ஓடிவரும்
ஆற்று வெள்ளம்!
பூக்களின்
வாசம் பெற
காத்து நிற்கும்
தனிமனிதன்!
கள்ளமாய்
மலர்களை
அடித்து செல்ல
துடிக்கும்
அசுரக்காற்று!
பூக்களுக்கு
காத்திருக்கும்
ஆற்று வெள்ளம்,
தனி மனிதன்,
அசுரக்காற்று!
யாருக்கு பூக்கள்?
அவசரமாய்
கதிரவனின்
காம பார்வை,
பூக்கள்
கருகிவிட்டன
மோகத்தால்!
உதிர துடிக்கின்றன!
அருகினிலே
ஓடிவரும்
ஆற்று வெள்ளம்!
பூக்களின்
வாசம் பெற
காத்து நிற்கும்
தனிமனிதன்!
கள்ளமாய்
மலர்களை
அடித்து செல்ல
துடிக்கும்
அசுரக்காற்று!
பூக்களுக்கு
காத்திருக்கும்
ஆற்று வெள்ளம்,
தனி மனிதன்,
அசுரக்காற்று!
யாருக்கு பூக்கள்?
அவசரமாய்
கதிரவனின்
காம பார்வை,
பூக்கள்
கருகிவிட்டன
மோகத்தால்!
Friday, 15 March 2013
கதாநாயகி!
பொன்னூஞ்சல்
கட்டி,
நிலாச்சோறு
ஊட்டி,
நடையும்
பழக்கி,
நடைமுறையும்
சொல்லி தந்து,
நல்லவனாய்
செப்பனிட்டாள்
என் அன்னை!
ஆனால்...
புத்தி மாறி,
தரம் கெட்டு,
நெஞ்சில்
உரம் கெட்டு,
பேதையாய்
என்னை மாற்றி,
என் அன்னை
விதைத்த
விதையை,
பதராக்கிய நீ...
யார்?
ஓ! இவ்வுலகின்
புரட்சி பெண்,
கலியுகத்தின்
கதாநாயகி,
என் மனதை
திருடிவிட்ட
என் காதலிதானே!
கவலையில்லை!
இனியாவது
உனது புதுவுலகிற்கு
அழைத்து போ!
புத்தம் புது
நடைமுறைகளை
கற்றுக் கொடு!
என்னை
புது மனிதனாய்
மாற்று!
கட்டி,
நிலாச்சோறு
ஊட்டி,
நடையும்
பழக்கி,
நடைமுறையும்
சொல்லி தந்து,
நல்லவனாய்
செப்பனிட்டாள்
என் அன்னை!
ஆனால்...
புத்தி மாறி,
தரம் கெட்டு,
நெஞ்சில்
உரம் கெட்டு,
பேதையாய்
என்னை மாற்றி,
என் அன்னை
விதைத்த
விதையை,
பதராக்கிய நீ...
யார்?
ஓ! இவ்வுலகின்
புரட்சி பெண்,
கலியுகத்தின்
கதாநாயகி,
என் மனதை
திருடிவிட்ட
என் காதலிதானே!
கவலையில்லை!
இனியாவது
உனது புதுவுலகிற்கு
அழைத்து போ!
புத்தம் புது
நடைமுறைகளை
கற்றுக் கொடு!
என்னை
புது மனிதனாய்
மாற்று!
Thursday, 14 March 2013
நேர் மாறாய்!
Location:Thirumarugal
India
Wednesday, 13 March 2013
Tuesday, 12 March 2013
செருப்பின் பிதற்றல்!
மனிதனே!
உன்னையொட்டி
உறவாடும் உறவுகள்,
ஒரு போதும்
உன்னுடன் துணையாய்
வருவதில்லை!
ஆனால் நானோ...
நீ! அழைத்த போதெல்லாம்
உன்னுடன் ஒட்டி
உறவாடினேன்!
உன்னை கட்டியும்
காத்தேன்!
நான் கடைப்பெட்டியில்
இருந்தபோது,
எனது மதிப்பு
உன்னை சிந்திக்க
வைத்தது!
ஆனால்...
நான் உன் காலடிக்கு
வந்த பின்னே,
உனது மதிப்பு
என்னை சிந்திக்க
வைத்தது!
கால்களை
கவர்ச்சி படுத்தும்
கொலுசுக்கும்,
மெட்டிக்கும்,
உள்ள உயர்வு...
உன் கால்களை
பாதுகாக்கும்
செருப்புக்கு...
அதுதான்
எனக்கில்லையா?
வருந்துகிறேன்!
இருக்கும் இடத்தில்
இருந்தால்தான்
எதற்கும் மதிப்பு!
கடையில் இருந்தபோது
எனக்கு மதிப்பு!
உன் காலடிக்கு
வந்தபின்னே
எனக்கு அவமதிப்பு!
உன்னையொட்டி
உறவாடும் உறவுகள்,
ஒரு போதும்
உன்னுடன் துணையாய்
வருவதில்லை!
ஆனால் நானோ...
நீ! அழைத்த போதெல்லாம்
உன்னுடன் ஒட்டி
உறவாடினேன்!
உன்னை கட்டியும்
காத்தேன்!
நான் கடைப்பெட்டியில்
இருந்தபோது,
எனது மதிப்பு
உன்னை சிந்திக்க
வைத்தது!
ஆனால்...
நான் உன் காலடிக்கு
வந்த பின்னே,
உனது மதிப்பு
என்னை சிந்திக்க
வைத்தது!
கால்களை
கவர்ச்சி படுத்தும்
கொலுசுக்கும்,
மெட்டிக்கும்,
உள்ள உயர்வு...
உன் கால்களை
பாதுகாக்கும்
செருப்புக்கு...
அதுதான்
எனக்கில்லையா?
வருந்துகிறேன்!
இருக்கும் இடத்தில்
இருந்தால்தான்
எதற்கும் மதிப்பு!
கடையில் இருந்தபோது
எனக்கு மதிப்பு!
உன் காலடிக்கு
வந்தபின்னே
எனக்கு அவமதிப்பு!
Monday, 11 March 2013
நினைவு இயந்திரம்!
ஊமை நெஞ்சுக்குள்
வற்றிவிட்ட
நினைவுகளை,
ஒரு நொடியில்
புதுப்பித்த கணினி
நீ!
நான் உன்னை
மீண்டும்
கண்ட போது,
என் பதைக்கும்
இதயம் கூட
அதிர்ச்சியில்
அதிர்ந்தது!
பிரிந்த உன்னை
மறக்க நினைத்து
நான் செய்த
முயற்சிகள்
படு தோல்வி!
உன்னை பார்த்த
பின்னே,
என் நினைவு
இயந்திரம்
மீண்டும் இயங்க
துவங்கிவிட்டது!
ஆம்!
நான் மீண்டும்
என் முகத்தை
கருமையாக்கி,
என் சோகத்தை
வெளிப்படுத்துவேன்!
வற்றிவிட்ட
நினைவுகளை,
ஒரு நொடியில்
புதுப்பித்த கணினி
நீ!
நான் உன்னை
மீண்டும்
கண்ட போது,
என் பதைக்கும்
இதயம் கூட
அதிர்ச்சியில்
அதிர்ந்தது!
பிரிந்த உன்னை
மறக்க நினைத்து
நான் செய்த
முயற்சிகள்
படு தோல்வி!
உன்னை பார்த்த
பின்னே,
என் நினைவு
இயந்திரம்
மீண்டும் இயங்க
துவங்கிவிட்டது!
ஆம்!
நான் மீண்டும்
என் முகத்தை
கருமையாக்கி,
என் சோகத்தை
வெளிப்படுத்துவேன்!
Sunday, 10 March 2013
இறப்பு!
துன்பப்படுகிறவனை
அமைதிக்கு
கொண்டு செல்லும்
அன்பு தாலாட்டு!
நல்லவனுக்கு
அவசரமாய்
விடை கொடுக்கும்
நயவஞ்சகன்!
நோயாளியின்
நோய் கொடுமையை
நொடிப்பொழுதில்
சுட்டெரிக்கும்
நெற்றிக்கண்!
தளர்ந்து போன
முதியவர்க்கு
உடனே கிடைக்கும்
கையூட்டு!
வாழத் துடிப்பவனை
வளைத்து போட்டு
வசைபாடி,
போக துடிப்பவனை
இருக்க வைத்து
விளையாடி,
இன்பம் காணும்
இனிய பொருள்!
தானாய்
செய்துகொள்ளும்
தற்கொலையை
தனக்குள்ளே
அடக்கி கொள்ளும்
கொடிய பொருள்!
மனிதனின் வாழ்வை
அடிக்கடி பயமுறுத்தி
அவன் முன்னேற்றத்திற்கு
தடையாய் அமைந்த
பெருஞ்சுவர்!
இறந்த பின்னால்
தீயவனையும்
நல்லவனாயாக்கும்
உயர்ந்த ஆசிரியன்!
இறப்பே வா!
மக்களை அமைதியில்
தாலாட்டு!
அமைதிக்கு
கொண்டு செல்லும்
அன்பு தாலாட்டு!
நல்லவனுக்கு
அவசரமாய்
விடை கொடுக்கும்
நயவஞ்சகன்!
நோயாளியின்
நோய் கொடுமையை
நொடிப்பொழுதில்
சுட்டெரிக்கும்
நெற்றிக்கண்!
தளர்ந்து போன
முதியவர்க்கு
உடனே கிடைக்கும்
கையூட்டு!
வாழத் துடிப்பவனை
வளைத்து போட்டு
வசைபாடி,
போக துடிப்பவனை
இருக்க வைத்து
விளையாடி,
இன்பம் காணும்
இனிய பொருள்!
தானாய்
செய்துகொள்ளும்
தற்கொலையை
தனக்குள்ளே
அடக்கி கொள்ளும்
கொடிய பொருள்!
மனிதனின் வாழ்வை
அடிக்கடி பயமுறுத்தி
அவன் முன்னேற்றத்திற்கு
தடையாய் அமைந்த
பெருஞ்சுவர்!
இறந்த பின்னால்
தீயவனையும்
நல்லவனாயாக்கும்
உயர்ந்த ஆசிரியன்!
இறப்பே வா!
மக்களை அமைதியில்
தாலாட்டு!
துக்கம்!
இரக்கம் கொண்ட
மனிதனை,
இளைப்பாறும்
இனிய பொருள்!
பசி வந்தால்
குழந்தைக்கு
துக்கம்!
பரிட்சை வந்தால்
மாணவனுக்கு
துக்கம்!
சீறிப்பாய்பவனையும்
சினம் தனிய
வைக்கும்
துக்கம்,
அழுத பின்னும்
ஆறாமல் தான்
போகும்!
இழப்புக்கு பின்னால்
காதலர் பெறும்
துக்கம்,
இறந்த பின்னும்
அடங்காத ஒன்று!
மொத்தத்தில்
இதயத்தை
எட்டிப்பார்க்காத
துக்கம்,
கண்களில் மட்டும்
பொய் கண்ணீர்
வடிக்கும்!
புண்கணீர்
பூசல் தரும்!
வள்ளுவனை
நினைவில்
கொள்வோம்!
மனிதனை,
இளைப்பாறும்
இனிய பொருள்!
பசி வந்தால்
குழந்தைக்கு
துக்கம்!
பரிட்சை வந்தால்
மாணவனுக்கு
துக்கம்!
சீறிப்பாய்பவனையும்
சினம் தனிய
வைக்கும்
துக்கம்,
அழுத பின்னும்
ஆறாமல் தான்
போகும்!
இழப்புக்கு பின்னால்
காதலர் பெறும்
துக்கம்,
இறந்த பின்னும்
அடங்காத ஒன்று!
மொத்தத்தில்
இதயத்தை
எட்டிப்பார்க்காத
துக்கம்,
கண்களில் மட்டும்
பொய் கண்ணீர்
வடிக்கும்!
புண்கணீர்
பூசல் தரும்!
வள்ளுவனை
நினைவில்
கொள்வோம்!
Saturday, 9 March 2013
Friday, 8 March 2013
தவறுகள்!
தவறியவனின் வாழ்வு
தறிகெட்டு போகிறது!
தவறியவளின் வாழ்வு
தரம் கெட்டு போகிறது!
மனிதன் தவறும்போது
உருவாகும் தவறு,
அவன் மீளும்போதும்
அடங்குவதில்லை!
தவறுகளை தரம் பார்க்க
தவறும்போது,
வழங்கும் நீதிகள் கூட
தவறாகிவிடும்!
தவறை தவறியும்
மன்னிக்க தெரியாதவன்,
வாழ்க்கை பாதையில்
தவறிதான் போவான்!
தவறுகளை தவறான
திசைக்கு திருப்பினால்,
அது பெரிய தவறு!
தவறுகளை நடுநிலையில்
ஆலோசித்தால் அது...
குறைக்கப்பட்ட சிறு தவறு!
தவறுகள் செய்யாதவன்
இவ்வுலகில் இல்லை
எனும்போது -பின்னர்
தவறுகள் எப்படி
தவறுகளாய் மாறும்!
தவறு செய்ய தூண்டுபவன்
வாழ்வில் நெறி தவறிய
பித்தன்!
தவறுக்காக வருந்துகிறவன்
மனிதர் குலத்தின்
ஞானி!
தவறுகளை மதிப்பவன்
துரோகி!
தவறுகளை மிதிப்பவன்
ஏமாளி!
தவறுகளை தவறாய்
எண்ணாதவன் மட்டுமே
யோகி!
தவறுகள் மனிதனின்
அழகை, குணத்தை,
வெளிப்படுத்தும்
ஆபரணங்கள்!
தறிகெட்டு போகிறது!
தவறியவளின் வாழ்வு
தரம் கெட்டு போகிறது!
மனிதன் தவறும்போது
உருவாகும் தவறு,
அவன் மீளும்போதும்
அடங்குவதில்லை!
தவறுகளை தரம் பார்க்க
தவறும்போது,
வழங்கும் நீதிகள் கூட
தவறாகிவிடும்!
தவறை தவறியும்
மன்னிக்க தெரியாதவன்,
வாழ்க்கை பாதையில்
தவறிதான் போவான்!
தவறுகளை தவறான
திசைக்கு திருப்பினால்,
அது பெரிய தவறு!
தவறுகளை நடுநிலையில்
ஆலோசித்தால் அது...
குறைக்கப்பட்ட சிறு தவறு!
தவறுகள் செய்யாதவன்
இவ்வுலகில் இல்லை
எனும்போது -பின்னர்
தவறுகள் எப்படி
தவறுகளாய் மாறும்!
தவறு செய்ய தூண்டுபவன்
வாழ்வில் நெறி தவறிய
பித்தன்!
தவறுக்காக வருந்துகிறவன்
மனிதர் குலத்தின்
ஞானி!
தவறுகளை மதிப்பவன்
துரோகி!
தவறுகளை மிதிப்பவன்
ஏமாளி!
தவறுகளை தவறாய்
எண்ணாதவன் மட்டுமே
யோகி!
தவறுகள் மனிதனின்
அழகை, குணத்தை,
வெளிப்படுத்தும்
ஆபரணங்கள்!
Thursday, 7 March 2013
கல்வி!
மனிதனை
தன்னலமின்றி
கலங்கரை
விளக்கமாய்
மாற்றும்
உயர் பொருள்!
கற்றவனின்
புகழையும்,
கல்லாதவனின்
அவமதிப்பையும்,
பொருமையுடன்
ஏற்றுக்கொள்ளும்
அன்புத் தாய்!
மக்களின்
மூடத்தனத்திற்கு
முதல் எதிரி!
கல்வி கற்கவும்
பணம் வேண்டும்,
பணம் ஈட்டவும்
கல்விவேண்டும்,
சில மதியற்றவர்க்கு
கல்வி ஒரு வணிகம்!
முழுமையாய் கல்வி...
ஒரு கறை படியாத
கன்னிப் பெண்!
மனிதனே!
கல்வி மேல்
காதல் கொள்!
தன்னலமின்றி
கலங்கரை
விளக்கமாய்
மாற்றும்
உயர் பொருள்!
கற்றவனின்
புகழையும்,
கல்லாதவனின்
அவமதிப்பையும்,
பொருமையுடன்
ஏற்றுக்கொள்ளும்
அன்புத் தாய்!
மக்களின்
மூடத்தனத்திற்கு
முதல் எதிரி!
கல்வி கற்கவும்
பணம் வேண்டும்,
பணம் ஈட்டவும்
கல்விவேண்டும்,
சில மதியற்றவர்க்கு
கல்வி ஒரு வணிகம்!
முழுமையாய் கல்வி...
ஒரு கறை படியாத
கன்னிப் பெண்!
மனிதனே!
கல்வி மேல்
காதல் கொள்!
Subscribe to:
Posts (Atom)










.jpg)
.jpg)






.jpg)


.jpg)


.jpg)
.jpg)





.jpg)



.jpg)



.jpg)

.jpg)
.jpg)
.jpg)


.jpg)

.jpg)
.jpg)