சிந்திய
மலர்களை எண்ணி,
செடிகொடிகள்
வருந்துவதில்லை!
வந்து போகும்
பகலை எண்ணி,
விண் மீன்கள்
வருந்துவதில்லை!
வற்றிய
நிலத்தை எண்ணி
பயிர்கள் பயந்து
வருந்துவதில்லை!
வறண்டுவிட்ட
குளத்தை எண்ணி,
மீன்கள்
வருந்துவதில்லை!
இழந்துவிட்ட
அழகை எண்ணி
இயற்கை
வருந்துவதில்லை!
மேகத்தின்
வருகையை எண்ணி,
கதிரவனும், சந்திரனும்
வருந்துவதில்லை!
இடைவிடா
இன்னல் எண்ணி
காட்டு விலங்குகள்
வருந்துவதில்லை!
இவை யாவும்
புதிது புதிதாய் தோன்றி
வாழ்வில் இன்பம்
காணவில்லையா?
மனிதா...
இழந்துவிட்ட
காதலை எண்ணி,
ஏன் கலங்குகிறாய்?
உனக்கும்
ஒரு புதிய காதல்
நிச்சயம் உண்டு!
மகிழ்ச்சி கொள்!
மலர்களை எண்ணி,
செடிகொடிகள்
வருந்துவதில்லை!
வந்து போகும்
பகலை எண்ணி,
விண் மீன்கள்
வருந்துவதில்லை!
வற்றிய
நிலத்தை எண்ணி
பயிர்கள் பயந்து
வருந்துவதில்லை!
வறண்டுவிட்ட
குளத்தை எண்ணி,
மீன்கள்
வருந்துவதில்லை!
இழந்துவிட்ட
அழகை எண்ணி
இயற்கை
வருந்துவதில்லை!
மேகத்தின்
வருகையை எண்ணி,
கதிரவனும், சந்திரனும்
வருந்துவதில்லை!
இடைவிடா
இன்னல் எண்ணி
காட்டு விலங்குகள்
வருந்துவதில்லை!
இவை யாவும்
புதிது புதிதாய் தோன்றி
வாழ்வில் இன்பம்
காணவில்லையா?
மனிதா...
இழந்துவிட்ட
காதலை எண்ணி,
ஏன் கலங்குகிறாய்?
உனக்கும்
ஒரு புதிய காதல்
நிச்சயம் உண்டு!
மகிழ்ச்சி கொள்!
.jpg)
.jpg)

No comments:
Post a Comment