ரசனை வழிதான்
காதல் என்றால்,
நான் ரசிக்க
தெரிந்தவன்தான்!
ஆம்...
உன்னை மட்டுமே
ரசிக்க தெரிந்த
ஏமாளி!
கண்கள் வழிதான்
காதலென்றால்,
நான் உன்னை
மட்டுமே பார்த்து,
கண் இழந்த
குருடன்!
உடல் வழிதான்
காதலென்றால்,
உன்னிடம்
என் உணர்ச்சிகளை
தாரை வார்த்து,
தடுமாறும்
பட்ட மரம்!
உள்ளம் வழிதான்
காதலென்றால்,
என் நினைவுகளை
நிலை மறக்க
செய்துவிட்ட நான்...
ஒரு பாலைவனம்!
உயிர் வழிதான்
காதலென்றால்,
என்னுயிரை
உனக்காக
ஏமாந்து மாய்த்துவிட
துடிக்கும் கோமாளி!
காதல் வழிதான்
காதலென்று,
இனியாவது
காதலர்க்கு
தோன்றட்டும்!
காதல் என்றால்,
நான் ரசிக்க
தெரிந்தவன்தான்!
ஆம்...
உன்னை மட்டுமே
ரசிக்க தெரிந்த
ஏமாளி!
கண்கள் வழிதான்
காதலென்றால்,
நான் உன்னை
மட்டுமே பார்த்து,
கண் இழந்த
குருடன்!
உடல் வழிதான்
காதலென்றால்,
உன்னிடம்
என் உணர்ச்சிகளை
தாரை வார்த்து,
தடுமாறும்
பட்ட மரம்!
உள்ளம் வழிதான்
காதலென்றால்,
என் நினைவுகளை
நிலை மறக்க
செய்துவிட்ட நான்...
ஒரு பாலைவனம்!
உயிர் வழிதான்
காதலென்றால்,
என்னுயிரை
உனக்காக
ஏமாந்து மாய்த்துவிட
துடிக்கும் கோமாளி!
காதல் வழிதான்
காதலென்று,
இனியாவது
காதலர்க்கு
தோன்றட்டும்!
.jpg)
No comments:
Post a Comment