உடல் துடிப்பை
உடனே கூறுபோட
துடிக்கும்,
உன்னத கருவிகள்!
உள்ளுக்குள்
உலர வைத்தாலும்,
தூவானமாய்
வெளிவரும்
மோசமான
மிருகங்கள்!
மனதை
கட்டவிழ்த்து
விட்டுவிட்டு,
நிகழ்வை
வேடிக்கை
பார்க்கும்
கேளிச்சித்திரங்கள்!
உரசியவனை
சுட்டெரிக்கும்!
விலகி செல்பவனை
உள்ளிழுக்கும்
ஏமாற்று வித்தைகள்!
உயிர் துடிப்பின்
அடங்கலின் போதும்,
கவி பாட துடிக்கும்
புதுமை கவிஞர்கள்!
மயங்கிபோய்
ஒன்றியவனை,
கிரங்க வைத்து
விளையாடி,
காவி உடுத்திய
பின்னும்
காமலீலை
செய்ய வைக்கும்
கரையான்கள்!
விட்டொழித்தவனையும்
விட்டு வைக்காத
உணர்ச்சிகளே!
நீங்கள் என்ன
கண் கட்டி
தீர்ப்பு கூறும்
நீதிபதிகளா?
உடனே கூறுபோட
துடிக்கும்,
உன்னத கருவிகள்!
உள்ளுக்குள்
உலர வைத்தாலும்,
தூவானமாய்
வெளிவரும்
மோசமான
மிருகங்கள்!
மனதை
கட்டவிழ்த்து
விட்டுவிட்டு,
நிகழ்வை
வேடிக்கை
பார்க்கும்
கேளிச்சித்திரங்கள்!
உரசியவனை
சுட்டெரிக்கும்!
விலகி செல்பவனை
உள்ளிழுக்கும்
ஏமாற்று வித்தைகள்!
உயிர் துடிப்பின்
அடங்கலின் போதும்,
கவி பாட துடிக்கும்
புதுமை கவிஞர்கள்!
ஒன்றியவனை,
கிரங்க வைத்து
விளையாடி,
காவி உடுத்திய
பின்னும்
காமலீலை
செய்ய வைக்கும்
கரையான்கள்!
விட்டொழித்தவனையும்
விட்டு வைக்காத
உணர்ச்சிகளே!
நீங்கள் என்ன
கண் கட்டி
தீர்ப்பு கூறும்
நீதிபதிகளா?

No comments:
Post a Comment