Sunday, 3 March 2013

அழிவில் தோன்றியவை!

கனவுகள்
களங்கப்படும்போது,
ஆழமிகு நினைவுகள்
பிரசவிக்கப்படுகின்றன!

சின்ன சின்ன
உயிரிகளின்
அழிவில்தான்,
உயர்ந்த உள்ளங்கள்
உரு பெறுகின்றன!

வெப்பமிகு பகலின்
முடிவில்தான்,
குளிர்ச்சிமிகு மாலை
தோன்றுகிறது!

உயிர்களின்
சோகங்களில்தான்,
ஓலமிட்டு இறப்புகள்
விகிதமுறுகின்றன!

உணர்ச்சிகளின்
உச்சக்கட்டத்தில்தான்,
இனிய உள்ளங்கள்
இனைகின்றன!

காதலின் கடைசி
விளையாட்டில்தான்,
ஓவியங்கள்
உயிர் பெறுகின்றன!

உரு பெற்றபின்
நிலை பெறுவது அன்பு!
ஆனால்...
அழிவுக்கு பின்னும்
நிலை பெறுவது
காதல்!

No comments:

Post a Comment