Tuesday, 5 March 2013

வரலாறு!

ஒவ்வொரு நாளும்
பூபாளம் பாடி
நாட்குறிப்பை
உலுக்கிவிடும்
உல்லாசக்காற்று!

இளைஞர்கள்
தங்கள் எதிர்காலத்தை
எண்ணி எண்ணி
ஆராயும் கருவூலம்!

ஆக்கம் முதல்
அழிவு வரை,
தனக்குள்ளே
பூட்டிவைக்கும்
சிறைச்சாலை!

காதலர்கள்
வாழ்ந்தாலும்,
வீழ்ந்தாலும்,
கல்லறையில்
குறித்து வைக்கும்
எழுத்தாணி!

சிரித்தவனை
சிந்திக்கவைக்கும்,
சிந்தித்தவனை
சிரிக்கவைக்கும்!
சூது வாது
அனைத்தையும்
அனைத்துகொள்ளும்!

மொத்தத்தில்
மனிதனின் சுழற்சி
வரலற்றில்தான்
பதிவாகும்!

1 comment:

  1. உங்கள் வரலாறும் பதிவாகட்டும்

    ReplyDelete