Saturday, 9 March 2013

புதுமைப் பெண்!

இருகிய
பாறையில்
இளந்தளிராய்
தோன்றியவளே!

வற்றிய
பாலைவனத்தில்
வசந்த மலராய்
மணம் வீசியவளே!

ஆழமில்லா
கிணற்றுக்குள்ளே
புது சுனையாய்
வந்தவளே!

மலட்டு
மண்ணின் மேலே
மாஞ்சோலையாய்
கனிந்தவளே!

நீ புதுமைப் பெண்!
ஏன் தெரியுமா?
என் வரண்டுவிட்ட
இதயத்திலும்
புதியக்காதல்
பரவ செய்தாய்!

No comments:

Post a Comment