அடியே!
நீயும் நானும்
காதல் சோலையில்
காலடி வைத்த நேரம்,
வசந்த மலர்கள்
வாய்விட்டு சிரித்து,
மகரந்தங்களை
அவசரமாய்
கொட்டிவிட்டு
இடம் பெயர்ந்தனவே!
நட்சத்திரங்கள்
நம்மை பார்த்து
வெட்கமாய் கண்சிமிட்டி,
வானத்தை விட்டுவிட்டு
வெகுதூரம்
ஓடி மறைந்தனவே!
குயில்கள் கூவுவதையும்,
மயில்கள் ஆடுவதையும்,
நிறுத்திவிட்டு
நிலைகொண்டு வேடிக்கை
பார்க்கின்றனவே!
நம்மை பார்த்த சந்திரன்
வெட்கமாய் முகம்சிவந்து,
நம் முகம் பார்க்க மறுவி
முகிலுக்குபின்
மறைந்ததுவே!
கதிரவன்
நம் காதலுக்கு ஆதரவாய்
உதயத்தை ஒத்தி வைத்து,
நம்மை உற்று
நோக்குகிறதே!
சோலை மரங்கள்
கிளையசைத்து பேசுவதை
தவிர்த்துவிட்டு,
அமைதியாய் ஆடாமல்
நின்றுவிட்டனவே!
தென்றல்
நம் உடல்களை
தொட்டுப்பார்த்து விளையாடி
கேளி செய்கின்றதே!
கண்ணே! நாம்தான்
உண்மை காதலர்
என்றெண்ணி
இயற்கைகூட தடம்புரண்டு,
தம் காதல் மணிமகுடத்தை
நமக்கு சூட்டிவிட்டது!
இனி கவலையில்லை!
காதல் வெற்றியை
இயற்கைக்கு
பரிசளிப்போம்
நலமாய்!
நீயும் நானும்
காதல் சோலையில்
காலடி வைத்த நேரம்,
வசந்த மலர்கள்
வாய்விட்டு சிரித்து,
மகரந்தங்களை
அவசரமாய்
கொட்டிவிட்டு
இடம் பெயர்ந்தனவே!
நட்சத்திரங்கள்
நம்மை பார்த்து
வெட்கமாய் கண்சிமிட்டி,
வானத்தை விட்டுவிட்டு
வெகுதூரம்
ஓடி மறைந்தனவே!
குயில்கள் கூவுவதையும்,
மயில்கள் ஆடுவதையும்,
நிறுத்திவிட்டு
நிலைகொண்டு வேடிக்கை
பார்க்கின்றனவே!
நம்மை பார்த்த சந்திரன்
வெட்கமாய் முகம்சிவந்து,
நம் முகம் பார்க்க மறுவி
முகிலுக்குபின்
மறைந்ததுவே!
கதிரவன்
நம் காதலுக்கு ஆதரவாய்
உதயத்தை ஒத்தி வைத்து,
நம்மை உற்று
நோக்குகிறதே!
சோலை மரங்கள்
கிளையசைத்து பேசுவதை
தவிர்த்துவிட்டு,
அமைதியாய் ஆடாமல்
நின்றுவிட்டனவே!
தென்றல்
நம் உடல்களை
தொட்டுப்பார்த்து விளையாடி
கேளி செய்கின்றதே!
கண்ணே! நாம்தான்
உண்மை காதலர்
என்றெண்ணி
இயற்கைகூட தடம்புரண்டு,
தம் காதல் மணிமகுடத்தை
நமக்கு சூட்டிவிட்டது!
இனி கவலையில்லை!
காதல் வெற்றியை
இயற்கைக்கு
பரிசளிப்போம்
நலமாய்!
.jpg)

No comments:
Post a Comment