சிற்றின்பம்!
கதிரவனும்,
சந்திரனும்,
தொலைபேசியில்
இணைந்தார்கள்!
ஒட்டுக்கேட்டேன்!
கதிரவன் சந்திரனிடம்
உனது குளிர்ச்சியை
இன்று மட்டும்
கடனாய் கொடு,
இனியாவது
கவிஞர்கள் என்னை
போற்றி பாடட்டும்!
என்றான்!
உடனே
என் பேனாவை
எடுத்தேன்,
கவிதை பிறந்தது!
கதிரவன் அற்பன்!
என்று தலைப்பிட்டேன்!
No comments:
Post a Comment