போதி மரம்!
மயங்கியவனுக்கு
மாலை வெயில்
போதி மரம்!
உறங்கியவனுக்கு
காலைக் கனவுகள்
போதி மரம்!
தவிப்பவனுக்கு
தஞ்சம் மட்டுமே
போதி மரம்!
தடுமாறியவனுக்கு
நன்மை தரும்
நல்லவழி
போதி மரம்!
காதலிப்பவனுக்கு
காதல் மட்டுமே
போதி மரம்!
ஆனால்...
கலங்கியவனுக்கு
காதல் தோல்விதான்
போதி மரம்!
No comments:
Post a Comment