Sunday, 3 March 2013

இருட்டில் ஒரு பிதற்றல்!

சற்று நில்லுங்கள்!
என் பிதற்றலை
செவிமடுத்து
செல்லுங்கள்!

நலம் குலைந்த
நான் கூறும்
வார்த்தைகள்
ஆனித்தனமானவை!

ஆர்ப்பரித்த
என் இதயம்,
அன்பால்
கூறு போடப்பட்டு
அடங்கிவிட்டது!

பாசத்திற்கு
பரிதவித்து,
பசலை நோய்
என்னுடலை
பற்றிக்கொண்டது!

மரண படுக்கையில்
என் உதடுகள்...
களிப்புடன்
இசை பாடுகிறது!

காதல் வெறியின்
கால்தடம் பதிக்கப்பட்டு,
என் மேனி சின்னதாய்
சிதைந்துவிட்டது!

பெண்களின் கண்களால்
என் கண்களில் புண்கள்!
நான் குருடன்!

இருட்டுக்குள்ளே
கவிதை எழுத
ஆணையிடப்பட்ட,
குருட்டு கவிஞன்!

குழிக்குள்ளே
அகல் விளக்காய்,
முடங்கிவிட்ட மனிதன்!

எனது சிலையை
சாலையில் நிறுத்தி
மாலை இடுங்கள்!
பெண்கள் திருந்தட்டும்!

No comments:

Post a Comment