உனதாக்கிக் கொள்!
பெண்னே!
நான் பேசிவரும்
காதல் மொழியில்
இனிமை இல்லையா?
நான்
புனைந்துவரும்
புதுக்கவிதையில்
புரட்சி இல்லையா?
என்
உணர்ச்சியின்
உந்துதலில்
உயர்வு இல்லையா?
நான்
பழகிவரும்
பழக்கத்தில்
பற்று இல்லையா?
இவைகளை
உனதாக்கிக் கொள்!
ஆம்! காதலிக்க
கற்றுக்கொள்!
இவை யாவும்
இனிக்கும் உனக்கும்!
No comments:
Post a Comment