Friday, 22 March 2013

தவிப்பு !

சிந்தனையில்
எழும்
சீர்கேடு!

கவிஞன்
மனதில்
கடைசிவரை
காத்திருக்கும்
காதலி!

காதலரை
அடிக்கடி
துரிதப்படுத்தும்
குத்தூசி!

ஏழ்மைக்கும்,
உயர்வுக்கும்
துணையாய்
இருந்துவரும்
பாதுகாவலன்!

மனிதனை
தொட்டும்,
விட்டும்
விளையாடும்
சூறைக்காற்று!

ஆனால்...
எனக்கு மட்டும்
என் உயிர் மூச்சு
இந்த பாழும்
தவிப்பு!

No comments:

Post a Comment