மன்னிப்பாயா? (ஓவியம்: அசோக்)
நான் திகைத்தபோது...
நீ தந்த ரோசாப் பூ?
நான் அழும்போது
என் மூளைக்குள்
வந்து சென்ற நீ!
காதல் தோல்வியில்
எனக்காக இறந்து,
காதல் பாடையில்
ஊர்வலம் சென்ற...
கருப்பு நிழல்! நீ?
நான் தலையில்
சூடும் பூக்களும்,
வண்ணம் பூசிய
என் முகமும்...
பொய் வாழ்வில்
புன்னகைக்கிறோம்!
இல்வாழ்வில்...
நல்லவள் நான்!
கணவனுக்கோ?
கட்டுப்பட்டவள்!
மனதை மட்டும்...
ஏமாற்றியவள்!
No comments:
Post a Comment