கரிசல்காட்டு பசுமைகள்!
உயர்வின்
வெளிச்சத்திற்கு
பின்னும்
தெரியும் இருள்!
உண்மையின்
ஆர்ப்பாட்டத்திற்கு
பின்னும்
தெரியும் அடக்கம்!
உறவின்
இறுக்கத்திற்கு
பின்னும்
தெரியும் உரசல்!
கரிசல் காட்டின்
இருளுக்கு
பின்னும்
தெரியும் பசுமை!
மனதின்
ஆழ்ந்த சிந்தனைக்கு
பின்னும்
தெரியும் அவசரம்!
மனித மனத்தின்
நிகழ் கால
தடுமாற்றங்கள்!
No comments:
Post a Comment