Wednesday, 8 May 2013

கண்ணீராய்...

செடிக்குள்ளே
புகுந்து
இளந்தளிராய்,
பூவாய்,
கனியாய்,
மாறி...

திடிரென்று
ஆவியாய்
மறைந்து,
மழையாய்,
தெள்ளமுதாய்,
தெளிநீராய்
மாறி...

எனக்குள்ளே
புகுந்து
செங்குருதியாய்,
சிறுநீராய்,
வியர்வையாய்
மாறி...

மனித
உணர்வுக்குள்
சிக்கி,
சீரழிந்து,
கண்ணீராய்
மாறும் நீ...
வெறும்
தண்ணீர்!


No comments:

Post a Comment