Wednesday, 22 May 2013

மகப்பேறு!

மோகத்தீயின்
இறுதி சடங்கு!

இன்பகளிப்பின்
இலக்கிய நயம்!

இடர்பட்ட
வேதனையின்
முழு விடுதலை!

இருட்டுக்கு
ஏற்பட்ட
முழுமையான
விடிவு காலம்!


உறவுக்கு
கிடைத்த
அழகான
அன்பளிப்பு!

உயிருக்கு
ஏற்பட்ட
உரசல்!

மனித மூச்சுக்கு
ஏற்பட்ட
முக்கிய சிக்கல்!

உணர்வுகளின்
உச்சக்கட்ட
வேதனை,
இந்த ஏற்றமிகு
மகப்பேறு!

No comments:

Post a Comment