இடைச் சொருகல்!
கைத்தறி
ஆடைக்குள்ளே
நூலாய்
நுழைந்துவிட்டவள்!
அவள் கண்களின்
காந்தத்திற்கு,
என்னிடம்...
திடீர் மின்சாரம்
பெற்று அதிர்ந்தவள்!
விரித்துவிட்ட
கூந்தலில்
என்னை
தலையணியாய்
இடைச் சொருகியவள்!
நான் வடித்த
கண்ணீருக்கு
உள்ளங்கை
ஏந்தியவள்!
நான் சிரித்துவிட்ட
ஓசையில்
வெட்கம்
கொண்டவள்...?
என் காதலி!
No comments:
Post a Comment