நீருக்கு வேதனை!
தூய நீரில்
சந்தனம்
கலந்தாலும்.
சாக்கடை
கலந்தாலும்
நாற்றம்தான்!
ஒன்று ரசிக்க!
மற்றொன்று
வெறுக்க!
நீருக்கு வேதனை!
ரசிப்பவர்கள்
அள்ளிப் பூசுவார்கள்!
வெறுப்பவர்கள்
அள்ளி வீசுவார்கள்!
சேர்ந்து மகிழ்ந்ததால்
நீருக்கு துன்பம்!
மனிதனின்
நட்புக்கு கண்ணாடி!
நல்ல சேர்க்கை
மணக்கும்!
No comments:
Post a Comment