Sunday, 19 May 2013

எரிமலையாய்...

குரங்குத்தனத்தின்
கும்மாளம்,
உறக்கத்தின் ஓரம்
தசைப்பிடிப்பின்
வீரம்...

விளையாட
கவரிமான்...
வலைக்கு
பின்னும்
காவல்!


ஓர விழியின்
அம்பு முனை...
அணைத்த பின்னும்
ஒளியில்லை!

தாகத்திற்கு
ஒரு துளி
நஞ்சு...
உன் இனிய
மொழிகள்!

உன் உரசலின்
வெப்பம்
எரிமலையாய்!
நான்...
கருகிவிட்டேன்!

No comments:

Post a Comment