Wednesday, 1 May 2013

கடல் மீன்கள் குளிக்கின்றன!

மனித
உறவுகளை
இழந்தாலும்
இல்லாத
சோகம்,

உயர்ந்த
நட்பை
உரசும்போது
கொந்தளிக்கிறது!

நட்புகள்..
கடல் மீன்கள்! 

தூய்மை
செய்வதாய்
எண்ணி
நல்ல நீரில்
குளிக்க
செய்யாதீர்கள்!

கடல் மீன்
விரைவாய்
உயிர் விடும்!

நட்பை
அதன் போக்கில்
கையாளுங்கள்!
உப்பின்
சுவைகூட
நாள்பொழுதில்
இனிக்கும்!

No comments:

Post a Comment