Saturday, 6 September 2014

வெட்கம் காட்டும்...


குனிந்த
முகத்தின்,
குவிந்த உதடும்,

விரல் நுழை
வெட்கம் காட்டும்...
சிவக்காத...
கன்னமும்,

தரை பார்த்து
தவிக்கும்...
உன் இமைகளும்,

வானவில் போல்
வளைந்த
கழுத்தும்!

சுமையின் வலி
அறியாத மார்பும்,

கைகளுக்குள்
சிக்கும்...
உன் சின்ன
இடையும்!

அசைந்தாடும்
வெண்ணிலவாய்...
உன் பின்னசைவும்,

கற்பனையில்
கண் முன்னே
தோன்றும்...
தொடைகளும்,

மின்னி மறைந்த
படமெடு நாகத்தின்
கருத்ததோர்
உருவமும்,

முகம் பார்க்கும்
கண்ணாடியாம்...
உன் பாதங்களும்,

ஆடை அணிகலன்
இல்லாமலேயே
அழகாய் இருக்குதடி,
என் இருண்ட
காதலில்?

No comments:

Post a Comment