Monday, 25 February 2013

உரசிப்பார்!

பொய்யுடன்
உரசிப்பார்,
கவிதையின்
உண்மை நிலை
விளங்கும்!

தங்கத்தை
உரசிப்பார்,
அதன் தரம்
எளிதில்
விளங்கும்!

நல்லவர்களுடன்
உன்னை உரசிப்பார்,
நீ! கெட்டவனாய்
தெரிவாய்!

கெட்டவர்களுடன்
உன்னை உரசிப்பார்,
நீ! நல்லவனாய்
தெரிவாய்!

மனிதனே!
நீ! உரசிப்பார்த்து
மாறுபட்டால்,
நீதான்
தரமான மனிதன்!

1 comment:

  1. பெரியாரை உரசிப்பார்த்தால் பகுத்தறிவு கிடைக்கும்.அரசியல்வாதிகளை உரசிப் பார்த்தால்?.....

    ReplyDelete