Saturday, 2 February 2013

வானுக்கு வா!

இனியவளே!
உன் இளமுகம் கண்டு
இளைப்பார எண்ணி,
இளைத்தேவிட்டேன்!

உன் மட்டற்ற
பணிவிடையில்,
பயணம் செல்ல
இயலாமல்,
நடைபிணமாய்
மாறிவிட்டேன்!

உன் பற்றற்ற
பார்வையில்
பலநாள்
கழித்திருந்தும்,
பயம் கொண்ட நான்
குத்திக்கொண்டேன்
என் கண்ணை! நானே!

காதல்மொழி ஏறாத
செவிட்டு செவியும்,
புன்சிரிப்பை உதிர்க்காத
உலர்ந்த உதடும்,
சிந்தனையை மறந்துவிட்ட
என் சின்ன இதயமும்,
உணர்ச்சியற்றுவிட்ட
வற்றிய உடலும்,
என்னுள் போர் பலசெய்து
என் குருட்டு கண்ணில்
துப்பியது கண்ணீரை!

அடி பெண்ணே!
உன் காதலற்ற கனலில்
வற்றிவிட்ட பார்வையை
பெற்றுவிட்ட என் கண்கள்,
நிச்சயமாய் கண்ணீர் சிந்த
மறக்காது!

என் கண்ணீர்துளிகள்
வெப்பமாய் பரவி,
உன் பனிக்கட்டி இதயத்தை
உருக வைக்கும் ஒரு நேரம்,
அந்நேரம்....
எனை நீ பார்க்க,
வந்துவிடு
வான்வெளிக்கு!

No comments:

Post a Comment