தாய்ப் பால்!
தோல்வியில்
துவண்ட எனது
கவிதைகளை...
அவளது மடியில்
வைத்து,
தாலாட்டினாள்!
காதல் பசியில்
துடித்த எனக்கு,
தமிழென்னும்
தாய்ப் பால்
ஊட்டினாள்!
மோகத்தில்
துடித்த எனக்கு,
தாகம் போக்க
கனவுகளை
அள்ளி தந்தாள்!
சோகத்தில்
தவித்த எனக்கு,
சுகம் தர...
எப்போது
வருவாள்?
காத்திருக்கிறேன்!
No comments:
Post a Comment