Monday, 2 June 2014

அவள்..வாழ்க!

காவியம் படைக்க
அவளின் உள்ளம்
கேட்டேன்....
உதறினாள்!

காப்பியம் படைக்க
துணை ஒன்று
கேட்டேன்!
குமுறினாள்!
காதலை படைக்க
கண்களை கேட்டேன்!
கதறினாள்!
ஓவியம் படைக்க
உருவம் கேட்டேன்!
ஓடினாள்!
கவிதை படைக்க
கரு ஒன்று...
கேட்டேன்!
கருவுற்றிருந்தாள்
அடுத்தவனுக்கு!
அவள் வாழ்க!

No comments:

Post a Comment