விழியசைத்து,
மதிமயக்கி,
காதல் ரசத்தை
இனிதாய் ஊட்டி...
காலத்தையும்
நேரத்தையும்
வீண் பொழுதாய்
போக்கி...
அவளின் மோக
முயற்சியில்...
அவனின்
காம தாகத்தை
முறுக்கேற்றி
தவிக்கவிட்டு,
கை அசைத்து
காட்டுவாள்...
அடுத்தவனின்
தோள்மீது
சாய்ந்துகொண்டு!
அவனின்
சுகமான தோல்வி
அழியாக் காதலாய்...
மாறும் இவ்வுலகில்!
No comments:
Post a Comment