Monday, 2 June 2014

யார் தருவார்? பட்டம்!

இதயத்தில்
வலித்ததை
வரியாய்
தருகிறேன்!

நான் தவித்ததை
தாகம் போக்க
தருகிறேன்!
நான் நினைத்ததை
கவிதையாய்
உயிர் கொடுக்கிறேன்!
எனது தோல்விக்கு
மருந்து தேடுகிறேன்!
எனது வெற்றியை
பகிர்ந்து கொள்கிறேன்!
மகிழ்ச்சியில்
சொந்தம்...
தேடுகிறேன்!
சோகத்தில் கூட
சுகம் தேடுகிறேன்!
இதற்கெல்லாமா
கவிஞர் பட்டம்
கிடைக்கும்?

No comments:

Post a Comment