Sunday, 7 July 2013

முழுமையாய் தருகிறேன்!

அன்புக் கடல்!
அது மிகப் பெரிது
அதில் இனி...
நீந்தி தவிக்க
என்னால்
இயலாது!

ஓடிவா!
அவளுக்கு முன்
நீ ஓடிவா!

ஆயிரம் பேர்கள்
என்னை கொஞ்சி
குலாவுகிறார்கள்!
அன்பு முத்தமும்
தருகிறார்கள்!


ஆனால் நீ!
எனக்கு மட்டும்
மணி மகுடம்!
உன் உயர்வுக்கு
கீழ் அவர்களை
பட்டியலிடுகிறேன்!

அன்பை
பங்கிடுகிறேன்!
அது நிச்சயம்
குறைய
போவதில்லை!

இதோ!
உனக்கு மட்டும்
என்னை
முழுமையாய்
தருகிறேன்
பெற்றுக்கொள்!

அனைவரின்
அன்பும்
எனக்கு சொந்தம்!
நான் மட்டும்
உனக்கு சொந்தம்!
கலங்காதே!

No comments:

Post a Comment