தவழ்ந்து வரும்
உணர்ச்சிக்கு
அதோ...
அந்த இளையவள்
இனிமையாய்
சிரிக்கிறாள்!
நீ! ஏன்...
ஊமையாய்,
உணர்ச்சிக்கு
தடை போட
வேண்டும்?
நான் உனக்காக
இருக்கிறேன்,
அவள் எனக்காக
தவிக்கிறாள்!
அவளுக்கும்
எனக்கும்
உறவு பாலம்
போட்டதற்கு
அடித்தூண்
நீயா? நானா?
காதல் கனவுகள்
அனைவருக்கும்
உரிமை!
ஆனால்...
நானோ
ஒருத்திக்கு
மட்டுமே
அடிமை!
அன்பின்
பரிமாற்றங்கள்
அடிக்கடி
மாறுவது
தவறில்லை!
அன்பு எப்போதும்
ஆழமாய் இருக்கும்
இடத்தில் தான்
தராசு முள்ளை
சாய்த்து வைக்கும்!
அவள் என்னிடம்
வரத்துடித்தாலும்,
நான் உன்னிடம்
வரவே துடிக்கிறேன்!
உணர்ச்சிக்கு
அதோ...
அந்த இளையவள்
இனிமையாய்
சிரிக்கிறாள்!
நீ! ஏன்...
ஊமையாய்,
உணர்ச்சிக்கு
தடை போட
வேண்டும்?
நான் உனக்காக
இருக்கிறேன்,
அவள் எனக்காக
தவிக்கிறாள்!
அவளுக்கும்
எனக்கும்
உறவு பாலம்
போட்டதற்கு
அடித்தூண்
நீயா? நானா?
காதல் கனவுகள்
அனைவருக்கும்
உரிமை!
ஆனால்...
நானோ
ஒருத்திக்கு
மட்டுமே
அடிமை!
அன்பின்
பரிமாற்றங்கள்
அடிக்கடி
மாறுவது
தவறில்லை!
அன்பு எப்போதும்
ஆழமாய் இருக்கும்
இடத்தில் தான்
தராசு முள்ளை
சாய்த்து வைக்கும்!
அவள் என்னிடம்
வரத்துடித்தாலும்,
நான் உன்னிடம்
வரவே துடிக்கிறேன்!

No comments:
Post a Comment