பரிசு!
என்னைப் பற்றிய
ஏளனங்களை
எடுத்து சொல்லி
விட்டேன்!
என் மனத்தின்
ஓலங்களையும்
பறை சாற்றி
விட்டேன்!
அருவருப்பான
என் உருவத்தை
மாசற்று
வருணித்தும்
விட்டேன்!
என் தவறுகள்
முழுவதையும்
பளிச்சென்று
காட்டி விட்டேன்!
இருப்பினும்
என் கெட்டுவிட்ட
இதயத்தை
பரிசாய்...
கேட்கிறாள்!
ஆம்...
அவள் என்னை
காதலிக்கிறாள்!
No comments:
Post a Comment