Friday, 19 July 2013

உன்னையும்...

கண் சிமிட்டி
மின்னி மறையும்
நட்சத்திரம்!


சில நிமிடங்கள்
மட்டும்...
சிரித்துவிட்டு
மறையும்
மூன்றாம் பிறை!


அவசரமாய்
தோன்றி,
வண்ண வண்ண
கனவுகளை
வீசிவிட்டு
உடன் மறையும்
வானவில்!


திடிரென்று
சுழன்று
சுற்றி மறையும்
சூறாவளி!


அந்த வரிசையில்
கன நேரம்
காதல் செய்து,


மறு நேரம்
விலகத்துடிக்கும்
நீ...
உன்னையும்
ரசிக்கிறேன்!


No comments:

Post a Comment