Saturday, 27 July 2013

ஓய்வெடுக்க...

மலையேற
முயற்சித்து,
உச்சிக்கு
ஊர்ந்து சென்றேன்!

இடையூறு
எதுவுமில்லை,
பனியும்
சறுக்கவில்லை!

ஏறிக்கொண்டே
இருக்கிறேன்!
இலக்கை அடைய
முடியவில்லை!


தடங்கல்கள்...
எங்கே
இருக்கின்றன?

தறிகெட்டு
போனதால்...
வழி தவறி
போகிறேன்!

இலக்கை அடைய...
முதலில் என் மனம்
ஓய்வெடுக்கட்டும்!
அதன் பின்
பயணம் தொடரும்!

No comments:

Post a Comment